- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
கார் உள்ளிட்ட வாகனங்களின் மைலேஜ், கையாளுமை, சொகுசு என பல்வேறு அம்சங்களிலும் டயர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. டயர்களை தேர்வு செய்வதிலும், பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த நிலையில், இன்று பெரும்பாலான வாகனங்களில் ட்யூப்லெஸ் டயர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ட்யூப் டயரைவிட ட்யூப்லெஸ் டயர்கள் பல்வேறு விதங்களில் நன்மைகளை அளிக்கின்றன.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
விபத்துக்களை தவிர்க்கும்…
இந்த அவசர உலகில் பாதுகாப்பு, எளிமையான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் ட்யூப்லெஸ் டயர்கள் முன்னிலை பெற்றுள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் இக்கால கட்டத்ததில் விபத்துக்களின் எண்ணிக்கையை ட்யூப்லெஸ் டயர்கள் கணிசமாக குறைத்து வருகின்றன. இந்த டயர்களின் சாதகங்கள், ட்யூப் டயரை ட்யூப்லெஸ் டயராக மாற்றலாமா போன்ற தகவல்களை பார்க்கலாம்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
பஞ்சர் பிரச்னைக்கு குட்பை
ட்யூப்லெஸ் டயர்களில் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருப்பது, பஞ்சர் ஆனால் கூட சிறிது தூரம் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியும். அதாவது, உடனடியாக டயரில் காற்றழுத்தம் குறையாது. அருகில் உள்ள மெக்கானிக் ஷாப் செல்லும் வரை வண்டியை ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதனால், நடுவழியில் நின்று அவதிப்படுவதை தவிர்க்கிறது. குறிப்பாக, ஸ்கூட்டர், காரை ஓட்டிச் செல்லும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
கையாளுமை
ட்யூப்லெஸ் டயர்கள் பாதுகாப்பில் மட்டுமல்ல, கார், பைக்கிற்கு சிறந்த கையாளுமையை வழங்கும். உட்புறத்தில் ட்யூப் இல்லாத காரணத்தால், ஸ்டீயரிங் வீல் ஓட்டுவதற்கு மென்மையாகவும், இலகுவான உணர்வையும் வாகன ஓட்டிக்கு வழங்கும். இதனால், ஓட்டுனரின் அயர்ந்து போவதை தவிர்க்கிறது.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
அதிக மைலேஜ்
ட்யூப்லெஸ் டயர்களில் காற்றழுத்தம் சீராக இருக்கிறது. மேலும், ட்யூப் டயர்கள் போன்று உடனடியாக குறையாது என்பதும், மற்றொரு மிகப்பெரிய சாதக விஷயம், ட்யூப் டயர்களை விட சற்றே அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். உராய்வு குறைவதால், வாகனத்தின் எரிபொருள் அதிகரிக்கிறது.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
பஞ்சர் ஆனாலும்…
ட்யூப் டயர்கள் பஞ்சர் ஏற்பட்டால் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று சக்கரத்தை கழற்றி மாட்டிதான் பஞ்சரை சரி செய்ய இயலும். ஆனால், ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஏற்பட்டாலும் சக்கரத்தை கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. தண்ணீரை ஸ்பிரே செய்து பஞ்சரை கண்டறிந்து அப்படியே பஞ்சரை சரிசெய்துவிட முடியும்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
நேரம் மிச்சம்
ட்யூப் டயர் பஞ்சரானால் நடுரோட்டில் உதவிக்கு கூட ஆள் இல்லாமல் கழற்றி மாட்ட வேண்டி இருக்கலாம். டூ வீலராக இருந்தால் நிலைமை இன்னும் சிக்கல். ஆனால், ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் பஞ்சர் ஒட்டுவதற்கு அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று செய்யும்போது நேரம் விரயமாவதும் தவிர்க்க முடியும்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
கவனம்
ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தை ஓட்டும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ரிம்மில் பாதிப்பு ஏற்பட்டால், காற்றழுத்தம் குறைந்து கொண்டே இருக்கும். எனவே, ரிம் பாதிக்கப்படாத வகையில் ஓட்டுவதும், பராமரிப்பதும் அவசியம்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
செய்யாதீங்க
இன்று டூவீலர் வைத்திருக்கும் பலர் ட்யூப் டயருக்கு பதிலாக ட்யூப்லெஸ் டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஸ்போக்ஸ் வீல் என்றாலும், அலாய் வீல் என்றாலும் அதன் ரிம் அமைப்பு ட்யூப்லெஸ் டயருக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே மாற்றவும். சிலர் சொல்வது போல, டேப் போட்டு ஒட்டிவிட்டு ட்யூப்லெஸ் டயரை போட வேண்டாம்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
ரிம்முடன் மாற்றும் வாய்ப்பு
ரிம் அமைப்பு சரியில்லாமல் ட்யூப்லெஸ் டயரை மாற்றினால், சில சமயம் விபத்துக்கு வழி ஏற்படுத்தி விடும். எனவே, மிக கவனமாக இதில் முடிவு எடுக்கவும். பலர் ட்யூப்லெஸ் டயரை மாற்றலாம் என்று கூறினாலும்,கைதேர்ந்த மெக்கானிக்கிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ரிம்முடன் சேர்த்து மாற்றினால் மட்டுமே பலன் தரும்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
வேண்டாமே…
ட்யூப்லெஸ் டயருக்குள் ட்யூப் போடுவதும் இப்போது சிலர் செய்கின்றனர். இதுவும் தவறான விஷயம்தான். இது தேவையில்லாத உராய்வு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதனையும் செய்யாதீர்கள். ட்யூப் டயருக்கும், ட்யூப்லெஸ் டயருக்குமான கட்டமைப்பு, கட்டுமானம் ஆகியவை முற்றிலுமே வேறானது என்பதை மனதில் வையுங்கள்.
ட்யூப் டயர் பொருத்தப்பட்ட வாகனத்தில் ட்யூப்லெஸ் டயர் மாற்றலாமா?
விலை
ட்யூப் டயரைவிட ட்யூப்லெஸ் டயர்கள் சற்று விலை அதிகம். எனினும், காரின் செயல்திறன், மைலேஜ், பாதுகாப்பு, எளிதான பழுது நீக்கும் முறை ஆகியவற்றால் சிறப்பான மதிப்பை தருகின்றன. அதேநேரத்தில், ட்யூப்லெஸ் டயர் இருந்தால் தினசரி ஒருமுறை பரிசோதிப்பது நல்லது. காற்றழுத்தம் சற்று குறைந்தாலும் பஞ்சர் இருக்கிறதா என்பதை கவனமாக பார்த்துவிட்டு வெளியில் எடுத்துச் செல்லுங்கள்.