Electric

சோனாலிகாவின் டைகர் எலக்ட்ரிக் டிராக்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் உழவு பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்ட்ரிக் டிராக்டர் என்ற பெருமையுடன் சோனாலிகா டைகர் எலக்ட்ரிக் (Sonalika Tiger Electric) விற்பனைக்கு ரூ.5.99 லட்சம் அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நவீனத்துவமான வசதிகளை பெற்று மின்சாரத்தில் இயங்கும் வகையிலான சோனாலிகா டிராக்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார டூ வீலர்கள், கார்கள், பேருந்துகள் பெருமளவு பயன்பாட்டுக்கு தயாராகி வரும் நிலையில் ஈ – டிராக்ட்ரும் வந்துள்ளது.

சத்தமில்லாமல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார டிராக்டர் அதிகபட்சமாக மணிக்கு 24.93 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த டிராக்டரில் பொருத்தப்பட்டுள்ள IP67 சான்றிதழ் பெற்ற 25.5 kW பேட்டரி மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

முழுமையான சார்ஜில் 2 டன் டிராலியுடன் 8 மணி நேரம் பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சாதாரண சார்ஜர் 3 பின் 15-amp மூலம் 10 மணி நேரத்திலும் ஃபாஸ்ட் சார்ஜர் என இரு ஆப்ஷன்களை வழங்கும் இந்நிறுவனம், மிக விரைவு சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்தில் முழுமையான சார்ஜ் ஏறிவிடும் என குறிப்பிட்டுள்ளது.

டீசல் இன்ஜின் டிராக்டருடன் ஒப்பீடுகையில் 75 சதவீத்துக்கு குறைவான கட்டணத்தில் இந்த மின்சார டிராக்டரை இயக்க முடியும் என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் டீசல் டிராக்டரின் டார்க்கிற்கு இணையாகவே இருக்கும் எந்த பனியிலும் டீசலுக்கு இணையாகவே எந்த சமரசமும் இன்றி செயல்படும் என உறுதியாகியுள்ளது.

சோனாலிகா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராமன் மிட்டல் பேசுகையில், “டைகர் எலக்ட்ரிக் என்பது சோனாலிகாவின் நிரூபிக்கப்பட்ட டிராக்டர் பிளாட்ஃபாரத்தில் விவசாயிகளின் நட்பை உறுதி செய்வதற்காகவும், மாசு உமிழ்வு இல்லாத பசுமையை நோக்கி முன்னேறும்போது பயன்படுத்த எளிதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. டைகர் எலக்ட்ரிக் மாடல் வழக்கமான டிராக்டரில் இருந்து வேறுபட்டதல்ல, எரிபொருள் செலவைக் குறைக்கும் போது அதை விவசாயி நட்பாக மாறும், இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே உலகளாவிய தொழில்நுட்ப அற்புதத்தைக் கொண்டுள்ளது.

டைகர் எலக்ட்ரிக் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள சோனாலிகாவின் ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும். இந்த ஆலை ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் முறையில் இயங்குவதனால் 2 நிமிடங்களுக்கு ஒரு புதிய டிராக்டரை தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.

அறிமுக சலுகையாக டைகர் எலெக்ட்ரிக் டிராக்டர் விலை ரூ.5.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button