
- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
வர்த்தக வாகனங்கள் விற்பனை மீட்சி பெற இன்னும் நீண்ட காலம் ஆகும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:மின்னணு வர்த்தகம் உள்ளிட்டவை மீட்சி பெற்றிருப்பதால், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, அடுத்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் தான், மீட்சி பெறும்.இத்தகைய வாகனங்களின் விற்பனையில் சற்று முன்னேற்றம் காணப்படினும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தேவை மிகவும் குறைவாகவே உள்ளது.சமீபத்திய அறிகுறிகள், பொருளாதார நடவடிக்கைகளில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.
இருப்பினும், இது தற்போதுள்ள சரக்கு போக்குவரத்து பயன்பாட்டை மட்டுமே அதிகரிக்கச் செய்யும். வாகனங்களுக்கான தேவையை அதிகரிப்பதற்கு, இன்னும் அதிக மீட்சி தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.