ATS ELGI புதிய தலைமுறை ஆட்டோமொடிவ் தீர்வுகளை வெளியிட்டது

ATS ELGI 2025 ம் ஆண்டு Bharat Mobility Global Expo – The Auto Expo Components Show-ல் புதிய தலைமுறை ஆட்டோமொட்டிவ் தீர்வுகளை வெளியிட்டது.
இந்தியாவின் முன்னணி கேரேஜ் உபகரண தயாரிப்பாளரும் Elgi Equipments Limited -ன் துணை நிறுவனமுமான ATS ELGI, 2025 ஆம் ஆண்டின் Bharat Mobility Expo-வில் மாறுபட்ட தொழில்நுட்ப ஆட்டோமொட்டிவ் தீர்வுகளை வெளியிட்டது. ATS Touchless Wheel Aligner, High-Performance Collision Repair System (CRS), Advanced Welding Equipment, Specialized EV Equipment, மற்றும் VR தொழில்நுட்பம் பயன்படுத்தி மேம்பட்ட டயக்னோஸ்டிக்ஸ் சாதனங்களின் டெமோ போன்ற புதுமைகள் ஜனவரி 18 முதல் 21 வரை யஷோபூமியில் நடைபெற்ற Auto Expo Components Show இல் Booth No. 7, Hall 02ல் அறிமுகப்படுத்தப்பட்டன.
“ATS ELGIயில், தொழில்நுட்பத்தில் முன்னேறிய, நீடித்த, நம்பகமான தீர்வுகளின் மூலம் ஆட்டோமொட்டிவ் சேவைத் துறையை மீண்டும் வரையறை செய்வதே எங்கள் நோக்கம்,” என ATS ELGI Ltd. மேனேஜிங் டைரக்டர் பிரவீன் திவாரி கூறினார். “இது எலக்ட்ரிக் மோபிலிட்டி மற்றும் புதிய தலைமுறை ஆட்டோமொட்டிவ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் இயக்கப்படும் துறையின் மாற்றத்துடன் முழுமையாக பொருந்துகிறது. Auto Expo 2025-இல் Smartlight Touchless Aligner, Autorobot Collision Repair System, Telwin Welders, மற்றும் Battery Lift, Battery Module Balancer, ACRU Machine, Battery Leak Detection, Specialized EV Tools ஆகியவற்றின் ஒரு ‘ஒன் ஸ்டாப் சால்யூஷன்’ அறிமுகம் நம் பயணத்தில் முக்கியமான அடிக்கல்லாகும். இந்த தீர்வுகள் துறையின் மாறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டவை.”
ATS ELGIயின் முக்கிய தீர்வுகள்:
• Smartlight – Touchless Wheel Aligner:
இந்த கான்டாக்ட்லெஸ் அளவீட்டு தொழில்நுட்பம் வாகன சேவையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வீல் கிளாம்பர்கள் மற்றும் இலக்கு சாதனங்கள் ஆகியவை தேவையில்லாமல் பாதுகாப்பான மற்றும் சேதமில்லாத சரிசெய்தலை உறுதி செய்கிறது.
• Autorobot – Collision Repair System (CRS):
சிங்கிள்-போல்ட் சில் கிளாம்புகள் மற்றும் பல்திசைச் சரிசெய்தல் வசதியுடன் ஸ்கிசர்-லிப்ட் அமைப்பைக் கொண்டுள்ளது.
• Telwin Welders:
பல்வேறு வேலைநிலைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய டெல்வின் வெல்டிங் சாதனங்கள் அதிக துல்லியத்தையும் நீண்டகால பயன்களையும் வழங்குகிறது.
• EV தயாரிப்புப் பகுதி:
உயர் மின்னழுத்த EV பேட்டரி சிஸ்டங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இன்சுலேட்டட் கருவிகள் மற்றும் Electrical PPE Kits தொழில்நுட்ப பணியாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கின்றன.
விசிட்டர்கள் மேம்பட்ட தீர்வுகளின் நேரடி டெமோக்களை ATS ELGI ஸ்டாலில் காணலாம் மற்றும் ATS ELGI நிபுணர்களுடன் கலந்துரையாடலாம்.
#atselgi #launches #touchlesswheelaligner #collisionrepairsystem #telwinwelders #BharatMobility2025 #thecomponentsshow