நியூமெரஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முதன்மையான EV டிப்லோஸ் தளத்தை வெளியிட்டது

நியூமெரஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முதன்மையான EV டிப்லோஸ் தளத்தை வெளியிட்டது
உள்நாட்டு மின்சார வாகனங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அதிநவீன அசல் உபகரண உற்பத்தியாளரான நியூமெரஸ் மோட்டார்ஸ், அதன் முதன்மையான டிப்லோஸ் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்தியது. சுற்றுச் சூழல் உகந்த போக்குவரத்தை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம் டிப்லோஸ் மேக்ஸ், டிப்லோஸ் ப்ரோ மற்றும் டிப்லோஸ் I-ப்ரோ ஆகிய மூன்று பல்துறை வகைகளில் கிடைக்கிறது. இந்த புதிய மாறுபாடான டிப்லோஸ் மேக்ஸ், ஜனவரி 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டு முன்பதிவுக்காக திறக்கப்பட உள்ளது. இந்த வாகனங்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளின் ஒரு வரம்பிற்கு ஏற்றதாக அவைகளை அமைக்கின்ற வகையில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றின் கொள்கைகளை உள்ளடக்குகிறது.
இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய ஓட்டுநர் சோதனையை 13.9 மில்லியன்
கிலோ மீட்டர்களுக்கு மேல் உள்ளடக்கி எந்த இந்திய OEM ம் செய்திராத கையில் முதல் முறையாக நடத்தியுள்ளது. இணையற்ற பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில், இந்த டிப்ளோஸ் ஸ்கூட்டர்கள் வரம்பு, பல்வேறு புவியியல் நிலப்பரப்புகளைக் கடந்து, எலக்ட்ரிக் வாகன கண்டுபிடிப்புக்கான புதிய தரநிலையை அமைத்து, இந்தியாவில் EV ஸ்கூட்டர்களின் எதிர்காலத்தை மறுவரையறை செய்தன. நியூமெரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மையான EV டிப்லோஸ் இயங்குதளத்தை வெளியிட்டது.
இந்த டிப்லோஸ் தளமானது அதன் மூன்று முக்கிய கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும் எல்லா வேளையிலும் முழுமையாக இணைக்கப்பட்ட மற்றும் தடையற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்ற அதிநவீன பொறியியல் மற்றும் புதுமையான வடிவமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: இந்த டிப்லோஸ் தளமானது டூயல் டிஸ்க் பிரேக்குகள், உயர்-செயல்திறன் எல்இடி விளக்குகள் மற்றும் திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன கண்காணிப்பு போன்ற மேம்பட்ட ஸ்மார்ட் அம்சங்களை ஒன்றிணைக்கிறது.
நம்பகத்தன்மை: சேஸ், பேட்டரி, மோட்டார், கன்ட்ரோலர் போன்ற வாகன அமைப்புகள் நிலையான நீண்ட கால உகந்த செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டு, பொறியியலாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
நீடித்துழைப்பு: பல்வேறு நிலப்பரப்புகளில் சிறந்த பிடிப்பையும் நீட்டிக்கப்பட்ட
ஆயுளையும் வழங்குகின்ற வலுவான சதுர சேஸ் மற்றும் அகலமான டயர்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நியூமெரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஷ்ரேயாஸ் ஷிபுலால் கூறுகையில், “நியூமெரஸ் மோட்டார்ஸில், நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் அடித்தளமாக சுற்றுச்சூழல் உகந்த மற்றும் பயனுள்ள போக்குவரத்து தீர்வுகளை நாங்கள் ஆராய்கிறோம். புதுமை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றிற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இந்த டிப்லோஸ் தளம் ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் உகந்த போக்குவரத்து தீர்வுகளுக்கு தீவிரமாக பங்களிக்கின்ற அதே வேளையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் வாகனத்தை வழங்குவதன் மூலம், எங்கள் பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த வெளியீடு, அதைச் செய்து முடிக்கும் மற்றும் உலகை எப்போதும் நகர செய்யும் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்குமான நவீன தொழில்நுட்பத்தை நடைமுறை வடிவமைப்புடன் இணைப்பதில் எங்களின் கவனத்தை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
நியூமெரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் அதன் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. எதிர்காலத்தில் அதன் வரம்பை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களுடன் இந்நிறுவனம் தற்போது 14 நகரங்களில் செயல்படுகிறது.