பஜாஜ் 35சீரீஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

பஜாஜ் சேத்தக் 35 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) பிரிவில் புதிய 35 சரீஸ்-ஐ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
மொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்திருந்தார் . சேத்தக் 3501 (Chetak 3501), சேத்தக் 3502 (Chetak 3502) மற்றும் சேத்தக் 3503 (Chetak 3503) ஆகியவையே அந்த வேரியண்டுகள் ஆகும்.
அறிமுகமாக 3501-க்கு ரூ. 1.27 லட்சம் விலையும், 3502-க்கு ரூ. 1.20 லட்சம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
சுலபமான ரைடிங் அனுபவம், பெரிய பூட் ஸ்பேஸ், குறைவான நேரத்தில் சார்ஜ் ஆகும் திறன் என ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த புதிய சீரிஸ் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கிறது.
விரிவாக சொல்ல வேண்டும் என்றால் ஓர் முழு சார்ஜில் 153 கிமீ வரையிலான ரேஞ்ச் திறன், 3 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜாகும் திறன் மற்றும் 35 லிட்டர் ஸ்டோரேஜ் ஆகிய வசதிகளுடன் புதிய சேத்தக் 35 சீரிஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
3.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து, அட்வான்ஸ்டு ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த ஸ்கூட்டருடன் ‘டெக்-பேக்’ (TecPac) எனும் அம்சத்தையும் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் வாயிலாக பன்முக நவீன கால வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உதாரணமாக, நேவிகேஷன், மியூசிக் கன்ட்ரோல், ஆவணங்களைச் சேகரித்து வைக்கும் வசதி, செல்போனுக்கு வரும் அழைப்பை நிர்வாகிக்கும் திறன் உள்ளிட்டவற்றை செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, ரிமோட் இம்மொபிலைசேஷன், வீட்டுக்குள் நாம் நுழையும் வரை வெளிச்சத்தை தரும் வசதி, ஜியோ ஃபென்சிங் மற்றும் திருட்டை தவிர்க்கும் வசதி உள்ளிட்டவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துடன், மிக முக்கியமாக விபத்தை உணரும் வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதில் மிகவும் அட்வான்ஸ்டான ரைடு அனுபவம் கிடைக்கும். இதேபோல், ரைடர்களின் பாதுகாப்பிற்காக ஸ்கூட்டருக்கான பேட்டரி பேக்குகள் கால் வைக்கும் ஃப்ளோரில் உள்ளது.
#automobileindustry #india #electricscooters #ev #bajajauto #35series #launched