CarsElectricNews

மஹிந்திராவின் XEV 9e அறிமுகம்

₹ 21.90 லட்சத்தில் மஹிந்திரா XEV 9e எஸ்யூவி வெளியானது

ரூ. 21.90 லட்சம் ஆரம்ப விலையில் நவீன தொழில்நுட்பம், ஆடம்பர வசதிகள் என அசத்தலான வகையில் மஹிந்திராவின் புதிய XEV 9e எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிக ஸ்டைலான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் இந்த மாடலில் 59Kwh, 79Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

பிரத்தியேகமான 152 காப்புரிமை மற்றும் 45 டிசைன் பதிவுகளை செய்துள்ள மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Heartcore டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்இவி 9இ மாடலில் மிக நேர்த்தியான எல்இடி விளக்குகள், கனெக்டேட் எல்இடி லைட் என மிகவும் ஸ்டைலிஷாக அமைந்திருப்பதுடன் மாறுபட்ட டிசைன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் பின்புறத்திலும் எல்இடி லைட்டிங் மற்றும் பேட்ஜிங் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவமான அடையாளத்தை பெற்று இன்டீரியரில் மூன்று ஸ்கிரீன் செட்டப் பெற்று மஹிந்திராவின் Adrenoxல் இயங்கும் மூன்று 12.3-இன்ச் டிஸ்பிளே அமைந்துள்ளது.

‘infinity Mahindra’ லோகோவினை பெறும் எஸ்யூவி கூபே ஸ்டைலில் உள்ள XEV 9e காரின் அளவுகளை பொறுத்தவரை 4,789 மிமீ நீளம் கொண்டு 2,775 மிமீ வீல்பேஸ் மற்றும் 207 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது. இந்த மாடலின் பேட்டரி தரையில் இருந்து 222 மிமீ உயரத்தில் அமைந்துள்ளது. மேலும், XEV 9e கார் 1006 மிமீ ஹெட்ரூம், 1055 மிமீ லெக்ரூம் மற்றும் 1522 மிமீ தோளுக்கான அறையை பெற்ற கேபினை கொண்டுள்ளது.

மஹிந்திரா XEV 9e எஸ்யூவி 663 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொள்ளளவு கொண்டுள்ளது.

59kWh வேரியண்ட் 231hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் ரேஞ்ச் 542 கிமீ (ARAI) ஆகவும், டாப் 79kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் 286hp பவர் மற்றும் 380Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 656Km (ARAI) அல்லது 533km ரேஞ்ச் (WLTP) வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலிலும் பிஇ 6இ போல 175kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரிகள் 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். மற்றபடி 11.2kW AC சார்ஜர் அல்லது 7.3kWh சார்ஜரை சார்ஜ் செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், கியர் விகிதங்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம், பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம் மற்றும் நான்கு வீலுக்கும் டிஸ்க் பிரேக்குகளும் உள்ளது. மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ஆட்டோ பார்க் அசிஸ்ட், காரில் உள்ள கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், லெவல் 2 ADAS தொகுப்பு, 360 டிகிரி கேமராக்கள் மற்றும் 7 ஏர்பேக்குகள் உள்ளன.

ஆரம்ப நிலை வேரியண்டின் ஆன்-ரோடு விலை ரூ.23.59 லட்சம் ஆக துவங்கலாம். முன்பதிவு துவங்கப்பட்டு பிப்ரவரி அல்லது மார்ச் 2025 முதல் டெலிவரி துவங்கும். முழுமையான விலை பட்டியல் ஜனவரி 17 , பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் வெளியாகும்.
#mahindra #XEV9e #electric #suv #launched

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button