பில்லியன்-இ நிறுவனத்துக்கு வாகனங்கள்: வழங்கத் தொடங்கியது அசோக் லேலண்ட்

பில்லியன்-இ குழுமத்தைச் சோ்ந்த பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கு தனது மின்சார வா்த்தக வாகனங்களை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வழங்கத் தொடங்கியுள்ளது.
மின்சார சரக்கு வாகனப் போக்குவரத்து நிறுவனமான பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கு 180 வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை-பெங்களூரு, சென்னை விஜயவாடா மாா்க்கங்களில் இயக்குவதற்காக அவற்றை அந்த நிறுவனம் வாங்குகிறது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஏவிடிஆா் 55 டன், பாஸ் 19 டன், பாஸ் 14 டன் ரகங்களைச் சோ்ந்த மின்சார வாகனங்களின் முதல் தொகுதி பில்லியன் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அசோக் லேலண்டின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷேனு அகா்வால் உள்ளிட்டோா் அந்த வாகனங்களை கொடியசைத்து அனுப்பிவைத்தனா் (படம்) என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ashokleyland #billione #electricvehicle #ev