மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள அல்ட்ரோஸ் ரேசர் காரின் விலை ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாடலில் R1, R2 மற்றும் R3 என மூன்று விதமான வேரியண்ட்டை கொண்டுள்ளது.
முந்தைய i-Turbo வேரியண்டுகளுக்கு மாற்றாக வந்துள்ள ரேசர் காரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க்கை வழங்கும் நிலையில், 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றதாக அமைந்துள்ளது.
அல்ட்ரோஸின் ரேசரில் ஆரஞ்ச், அவெனியூ வெள்ளை மற்றும் ப்யூர் கிரே என மூன்று விதமான நிறங்களை பெற்று 16 அங்குல அலாய் வீல், ஸ்போர்ட்டிவ் பாடி கிராபிக்ஸ் ஆனது பானெட் மற்றும் கூரைக்கு கருமை ந்நிறம் வ்வழங்கப்பட்டு வெள்ளை நிற ரேசிங் ஸ்டிரிப், முன் ஃபெண்டர்களில் ‘ரேசர்’ பேட்ஜ் மற்றும் 6 ஏர்பேக்குகளுடன் வந்துள்ளது.
இன்டிரியர் அம்சங்களில் 10.25-இன்ச் தொடுதிரை, புதிய 7.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் சில ஸ்டைலிங் மேம்பாடுகளுடன் மேம்பட்ட ரேசர் பேட்ஜிங் கொண்டதாக அமைந்துள்ளது.
டாப் வேரியண்டில் 360 டிகிரி கோண கேமரா, டாடாவின் iRA- கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள், முன்பக்க இரு இருக்கையிலும் காற்றோட்டமான வசதி மற்றும் காற்று சுத்திகரிப்பு வசதிகளும் உள்ளது.
#TataMotors #launches #ALTROZ #altrozracer