Truck & Bus

2022-ல் வருவாய் மற்றும் விற்பனை இரண்டிலும் வலுவான வளர்ச்சியை பதிவுசெய்திருக்கும் டெய்ம்ளர் இந்தியா

2022-ல் வருவாய் மற்றும் விற்பனை இரண்டிலும் வலுவான வளர்ச்சியை பதிவுசெய்திருக்கும் டெய்ம்ளர் இந்தியா

2022-ல் வருவாய் மற்றும் விற்பனை இரண்டிலும் வலுவான வளர்ச்சியை பதிவுசெய்திருக்கும் டெய்ம்ளர் இந்தியா,

இந்தியாவில் தனது உற்பத்தி செயல்பாடுகளை தொடங்கியதற்குப் பிறகு அதிக வெற்றிகரமான பிசினஸ் ஆண்டுகளுள் ஒன்றாக 2022 இருந்திருப்பதை டெய்ம்ளர் டிரக் ஏஜி-க்கு 100% சொந்தமான ஒரு துணை நிறுவனமான டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. வழங்கல் சங்கிலித் தொடரில் கடும் சிரமங்களுடன் எதிர்மறையான செலவு சூழல் நிலவியபோதிலும் கூட 2022-ம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக DICV-க்கு இருந்திருக்கிறது. 2021 காலண்டர் ஆண்டை விட, 2022 காலண்டர் ஆண்டில் 37% வருவாய் வளர்ச்சியும் மற்றும் 25% விற்பனை வளர்ச்சியும் எட்டப்பட்டிருப்பதை இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த காலண்டர் ஆண்டில் உள்நாட்டிற்கும் மற்றும் ஏற்றுமதிக்கும் மொத்தத்தில் 29,470 டிரக்குகள் மற்றும் பேருந்துகளை DICV விற்பனை செய்திருப்பதால் 2022, வளர்ச்சியின் மிகச்சிறந்த ஆண்டாக இருந்திருக்கிறது.
கூடுதலாக, தனது ஒரகடம் உற்பத்தி ஆலையில் 200,000 வாகனங்கள் (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிகள் உட்பட) மற்றும் 200,000 டிரான்ஸ்மிஷன்கள் என்ற உற்பத்தி மைல்கல்லை 2022-ம் ஆண்டில் தான் வெற்றிகரமாக கடந்திருப்பதை DICV உறுதிசெய்திருக்கிறது. 2022-ம் ஆண்டில் 11,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் வருடாந்திர அளவில் மிகச்சிறந்த வாகன ஏற்றுமதி என்ற சாதனையை இது நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை மிகச்சிறந்த வருடாந்திர அடிப்படையிலான உதிரிப்பாகங்கள் விற்பனை (245 மில்லியனுக்கும் அதிகமான உதிரிப்பாகங்கள்) மற்றும் வருடாந்திர அடிப்படையில் உள்நாட்டில் மிகச்சிறந்த வாகன விற்பனை என்ற சாதனைகளையும் இந்நிறுவனம் பதிவுசெய்திருக்கிறது.
DICV-யின் 2022 ஆண்டுக்கான செயல்பாடு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. சத்யகாம் ஆர்யா கூறியதாவது: “வருவாயில் 37% மற்றும் விற்பனையில் 25% என்ற வளர்ச்சி பதிவுடன் எமது சிறப்பான சாதனை ஆண்டுகளுள் ஒன்றாக காலண்டர் ஆண்டு 2022 இருந்திருக்கிறது. உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை நாங்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறோம். இந்தியாவில் எமது செயல்பாடுகள் தொடங்கப்பட்டு வெறும் 10 ஆண்டுகளுக்குள் இந்த மகிழ்ச்சிகரமான பிசினஸ் வெற்றியை நாங்கள் எட்டியிருக்கிறோம்; தொடக்கத்திலிருந்தே சந்தையில் கணிசமான முதலீடுகளை சந்தையில் செய்திருக்கும் நாங்கள், கடந்த பத்தாண்டுகளில் வர்த்தக வாகன தொழில்துறை எதிர்கொள்ள வேண்டியிருந்த கடும் சவால்களையும், சிக்கல்களையும் வெற்றிகரமாக கடந்து முன்னேற்றம் கண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வர்த்தக வாகன விற்பனையை கடுமையாக பாதித்திருந்த போதிலும் எமது விற்பனை மற்றும் நிதிசார் செயல்பாடுகள் வலுவாகவே இருந்திருக்கின்றன. எமது செலவினம் மற்றும் வருவாய் நிலையை தொடர்ந்து நிலையாக மேம்படுத்தியிருப்பதன் மூலம் இச்செயல்பாட்டை நாங்கள் சாத்தியமாக்கியிருக்கிறோம். மேலும் எமது தயாரிப்பு அணிவரிசையை விரிவாக்குவதில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்; விரும்பியதை தேர்வுசெய்ய பல்வேறு டன்கள் திறன்கொண்ட ஒரு விரிவான அணிவரிசையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக பாரத்பென்ஸ் டிரக்குகளின் 10 புதிய மாடல்களை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம். இனி வரும் காலத்தில் எமது செயல் உத்தியின் அடித்தள அம்சங்களாக டிஜிட்டல்மயமாக்கல், விளைவை ஒரு சேவையாக வழங்கும் சர்விட்டைசேஷன், நிலைப்புத்தன்மை, பன்மயம் மற்றும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஆகியவற்றின் மீது முதலீடு செய்திருப்பதன் வழியாக இந்தியாவில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பிசினஸ் வழிமுறைகளை மேம்படுத்தி உருமாற்றம் செய்யும் பணியை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) செயல்பாடுகளை நாங்கள் விரிவாக்கியிருக்கிறோம்; பன்மயம், சமத்துவம் & உள்ளடக்கல், எமது பணியாளர்களின் திறன் உயர்த்தல் மற்றும் மறுதிறன் பயிற்சி ஆகியவை மீது பிரத்யேக கூர்நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்துவரும் ஆண்டுகளிலும் மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் போக்குவரத்து துறையில் எமது குறிக்கோளை அடைவதற்கு இதுபோன்ற இன்னும் பல முன்னெடுப்புகளை நாங்கள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறோம்.”
பாரத்பென்ஸ்-ன் நிகரற்ற நேர்த்தி கடந்த பத்தாண்டுகளில், கட்டுமானத் துறை மற்றும் சுரங்கப்பணி தொழில் பிரிவில் தனது வலுவான ஆதிக்கத்தை DICV நிலைநிறுத்தியிருக்கிறது. பாரத்பென்ஸ்-ன் கனரக டிரக்குகள் இத்துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் 3532CM மைனிங் டிப்பர், 2832CM மைனிங் டிப்பர், 5532 டிப்-டிரெய்லர் போன்ற அதிக சக்திவாய்ந்த கனரக டிரக்குகளின் விரிவான அணிவரிசையை பாரத்பென்ஸ் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுரங்கப்பணி துறைகளில் பயன்படுத்துவதற்காக 6×4 மற்றும் 10×4 விருப்பத்தேர்வுகளை கொண்டதாக இவைகள் இருக்கின்றன. 6 சக்கரங்கள் கொண்ட 13T நடுத்தர ரக வாகனங்களிலிருந்து 22 சக்கரங்கள் கொண்ட 55T டிரக்குகள் (டிப் டிரெய்லர்கள்) வரை டிப்பர் வகையினத்தில் மிக விரிவான அணிவரிசையில் தயாரிப்புகளை பாரத்பென்ஸ் வழங்கி வருகிறது. தரைப்பரப்பில் கட்டுமானப் பணி, சுரங்கப்பணி, நீர்ப்பாசனம் / சுரங்கம் தோண்டுதல் மற்றும் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வினியோகம் ஆகியவை உட்பட விரிவான பல்வேறு பிரிவுகளில் இந்த டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கான்கிரீட் தயாரிப்பில் நிலவுகிற வெவ்வேறு தேவைகளுக்கு பொருத்தமான வகையில், ரெடி மிக்ஸ் சிமெண்ட் (RMC) பயன்பாட்டு துறையை, அதன் இன்ஜினால் முன்னெடுக்கப்படும் PTO தீர்வுகளைக் கொண்டு புதிய நிலைமாற்றத்தை பாரத்பென்ஸ்-ன் புதிய தலைமுறை தயாரிப்புகள் கொண்டுவருகின்றன.
பன்மயம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கல் எதிர்காலத்தின் மீது சிறப்பு கவனம் கொண்டிருக்கும் DICV, சவால்மிக்க ஆனால் துடிப்பான எதிர்காலத்திற்கு தயாராக பணியாளர்களுக்கு உதவ அவர்களது சமூக – தொழில்முறை மதிப்பீடுகளுக்கு மேலும் உத்வேகமளிக்க உதவுவதன் வழியாக ஒருங்கிணைந்து ஒத்துழைப்போடு செயல்படும் பணி கலாச்சாரத்தை உருவாக்க பன்மயம், சமத்துவம் மற்றும் உள்ளடக்கல் ஆகிய நோக்கங்களை சார்ந்த சிறப்பு முன்னெடுப்புகளை செயல்படுத்த தொடங்கியிருக்கிறது. தனது பணியாளர்களின் திறன்களை வலுப்படுத்துவதற்காக கற்றல் மற்றும் மேம்பாடு முன்னெடுப்புகளையும் இந்நிறுவனம் அதிகரித்திருக்கிறது; இவைகளின் மூலம் கிடைக்கப்பெறும் கற்பிதங்கள், அடுத்த பத்தாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்நடவடிக்கைகளின் குறிக்கோளாகும்.
திரு. சத்யகாம் ஆர்யா மேலும் பேசுகையில், “நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பணியாளர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களது பங்களிப்பை DICV உணர்ந்திருக்கிறது; அங்கீகரிக்கிறது. உற்பத்தி பணி என்பது பணியாளர்களது பங்களிப்பு செறிவாக இருக்கும் ஒரு தொழில் பிரிவாகும். நிறுவன அமைப்பின் செயல்முறைகளுக்கு ஒரு மானுட நபரால் கொண்டுவரக்கூடிய நுட்பமும், அர்ப்பணிப்பும், பேரார்வமும் உண்மையிலேயே ஒப்பீடு செய்ய இயலாதது; தொழில்நிறுவனங்களுக்கு ஆதாயமளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மானுட பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மீது அதிகமாக சார்ந்திருக்கும் உலகில் அடுத்த கருத்தியல் மாற்றத்தை அடைவதற்கு பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே, எதிர்காலத்தில் எமது பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்கு அவர்களை தயார் செய்வதற்கு உதவுவது தலைவர்களாக பணியாற்றும் எமது பொறுப்பு என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம்,” என்று கூறினார்.
சுற்றுச்சூழல், சமூக நலன் & ஆளுகை (ESG) சுற்றுச்சூழல், சமூக நலன் & ஆளுகை (ESG) மீது கூர்நோக்கத்துடன் நிலைப்புத்தன்மையுள்ள பிசினஸ் செயல்உத்தியை கொண்டிருக்கும் DICV, 2025-ம் ஆண்டுக்குள் அதன் இயக்க செயல்பாட்டில் CO2 நடுநிலை நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி முனைப்புடன் பணியாற்றிவருகிறது. ஒரகடத்தில் 430 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, அதன் 85% செயல்பாடுகளுக்காக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. ஆலையிலேயே நிறுவப்பட்டிருக்கும் சூரியஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையின் 90% பயன்பாட்டுக்கான நீர், சுய சார்புடன் அமைவிடத்திலேயே பெறப்படுகிறது. அத்துடன், இங்கு அமைக்கப்பட்டுள்ள மியாவாக்கி வனத்தினால் சிறப்பான பசுமைப்பரப்பு உற்பத்தி ஆலை அமைவிடத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து திறன் & புத்தாக்கம் போக்குவரத்து தொழில்துறையில் வலுவான ஆதிக்கத்தை கொண்டிருப்பதற்கு உதவ தீர்வுகளை அடையாளம் காணவும், புதிய சிந்தனைகளை உருவாக்கி செயல்படுத்தவும் ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் உடன் 2022-ம் ஆண்டில் DICV கூட்டுவகிப்பு ஒப்பந்தத்தை செய்திருக்கிறது. சிறப்பான மேம்பாடுகளை உருவாக்கும் முன்னெடுப்புகளை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 2023-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து அவைகளை வளர்த்து உருவாக்கும் நடவடிக்கையை DICV எடுத்து வருகிறது.
சென்னை அருகே உள்ள ஒரகடம் உற்பத்தி ஆலையில், பாரத்பென்ஸ் (உள்நாட்டுக்கான பிராண்டு), மெர்சிடஸ்-பென்ஸ், ஃப்ரைட்லைனர் மற்றும் மிட்சுபிஷி பியுஸோ என்ற நான்கு டிரக் பிராண்டுகளின் வாகனங்களை DICV தயாரிக்கிறது. ஒரகட ஆலையில் தயாரிக்கப்படும் உயர்தர டிரான்ஸ்மிஷன்கள் பாரத்பென்ஸ் டிரக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவெங்கும் 400-க்கும் அதிகமான வலுவான சப்ளையர் அடித்தளத்தையும் மற்றும் 300-க்கும் கூடுதலான பாரத்பென்ஸ் விற்பனை மற்றும் சேவை அமைவிடங்களையும் DICV கொண்டிருக்கிறது. வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பிராந்தியங்களில் தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே 2 மணிநேரத்திற்குள் வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த பிராண்டின் டீலர்ஷிப்களும், சர்வீஸ் ஸ்டேஷன்களும் அமைந்துள்ளன. இந்தியாவில் மோதல் சோதனைகளில் அதிக பாதுகாப்பான கேபின்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் கேபின்களோடு பாரத்பென்ஸ்-ன் டிரக்குகள் தயாரிக்கப்படுவதால் இந்திய வர்த்தக வாகன தொழில்துறையில் அதிக பாதுகாப்பு மிக்க டிரக்குகளின் தயாரிப்பாளர் என்ற பெருமையையும், நற்பெயரையும் பாரத்பென்ஸ் பெற்றிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button