3 மில்லியன் காமன் ரயில் தயாரித்து டெல்ஃபி டிவிஎஸ் மைல்கல் சாதனை
முன்னணி ஆட்டோமொபைல் பாகங்கள் பிராண்டான டெல்பி-டிவிஎஸ் டெக்னாலஜிஸ், சென்னை ஒரகடத்தில் உள்ள தங்களின் உற்பத்தி நிலையத்திலிருந்து மூன்று மில்லியன் காமன் ரயில் அமைப்புகள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. காமன் ரெயில் அமைப்பின் முதல் தொகுதி 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மற்றொரு சாதனையாக ஐந்து மில்லியன் ரோட்டரி பாம்புகளும் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மைல்கல் சாதனையை அவர்களின் ஒரகடம் ஆலையில் ஏப்ரல் 12 ஆம் தேதி நினைவுகூரவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் – தொழில் துறை, திரு. எஸ். கிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் வாடிக்கையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
டெல்பி-டிவிஎஸ், பயணிகள் கார், வணிக வாகனங்கள், டிராக்டர்கள், கட்டுமான உபகரண வாகனங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் உட்பட அனைத்து டீசல் எஞ்சின் தயாரிப்பாளர்களுக்கு தங்களின் தயாரிப்புகளை வழங்குகின்றனர். காமன் ரெயில் பம்புகள், இன்ஜெக்டர்கள், ரெயில்கள் மற்றும் ஃபில்டர்கள் அனைத்தையும் உலகத்திலேயே ஒரே கூரையின் கீழ் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பத்தில் நான்கு டீசல் வாகனங்கள் எங்கள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன என்று தெரிவிக்கின்றனர்.
டெல்பி-டிவிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. டி.கே. பாலாஜி பேசுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிக்கனப் பொறியியலுடன் அதிநவீன குளோபல் டெக்னாலஜியை நாங்கள் வழங்குகிறோம். புதுமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளுடன் இந்திய சந்தையுடனான எங்களின் நல் உறவினால் இந்த மைல்கல்லை எட்டி உள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களை சிறந்த தயாரிப்புகளால் மகிழ்விக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.
டெல்பி-டிவிஎஸ் டெக்னாலஜிஸின் தலைவர் திரு. ஏ. விஸ்வநாதன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், “டெல்பி-டிவிஎஸ் அடுத்த தலைமுறை டீசல் எரிபொருள் தொழில்நுட்பத்திற்கான இந்திய மற்றும் உலகளாவிய உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் காமன் ரெயில் அமைப்புகளை உற்பத்தி செய்வதை ஆதரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஐரோப்பிய மற்றும் கொரிய OEM களுக்கு எங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். முழு ஆயத்த தயாரிப்பு திறன்களைக் கொண்ட எங்கள் தொழில்நுட்ப மையம் இந்திய சந்தைக்கான அனைத்து BS VI தீர்வுகளையும் உருவாக்கியுள்ளது. காமன் ரயில் அமைப்புகள் தேவைப்படும் டிராக்டர் உமிழ்வு விதிமுறைகளான TREM V -ன் அடுத்த சுற்றுக்கு நாங்கள் நன்கு தயாராக உள்ளோம்.
டெல்பி-டிவிஎஸ் டெக்னாலஜிஸ் டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, ஜேசிபி, ரெனோ, எஸ்கார்ட்ஸ் குரூப், TAFE மற்றும் பல பெரிய வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோமேட்டிவ் மற்றும் ப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்ஸ் போன்றவற்றுக்கு முக்கிய சப்ளையர் ஆவார். இவர்கள் நாடு முழுவதும் 350 சந்தைக்குப்பிறகான சேவை வலையமைப்பைக் கொண்டுள்ளனர்.
நிறுவனம் பற்றி:
டெல்பி-டிவிஎஸ் டெக்னாலஜிஸ் போர்க்வார்னர் யுஎஸ்ஏ மற்றும் டி.வி.சுந்தரம் ஐயங்கார் & சன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும் . போர்க்வார்னர் உலகின் மிகப்பெரிய வாகன சப்ளையர்களில் ஒருவராகும். TVS, இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமேட்டிவ் சிஸ்டம்ஸ் சப்ளை குழுமமாகும்.