யூனோ மிண்டா BS VI 2 சக்கர வாகன என்ஜின் ஆயில்களை கேரளாவில் அறிமுகப்படுத்தியது
யூனோ மிண்டா BS VI 2 சக்கர வாகன என்ஜின் ஆயில்களை கேரளாவில் அறிமுகப்படுத்தியது

அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு (OEMs) தனியுரிம ஆட்டோமோட்டிவ் தீர்வுகளின் முன்னணி அடுக்கு 1 சப்ளையரான யூனோ மிண்டா, அதன் BS VI-இணக்கமான ஆட்டோமோட்டிவ் இன்ஜின் ஆயில்களை ஆஃப்டர் மார்க்கெடில் இரு சக்கர வாகனங்களுக்கு அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் ஆற்றல்-திறனுள்ள இன்ஜின் ஆயில்களுக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதோடு, தங்கள் வாகனங்களுக்கு அதிக செயல்திறன் கொண்ட லூப்ரிகண்டுகளைத் தேடும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மினரல், செமி ஸின்தடிக் மற்றும் முழு ஸின்தடிக் என மூன்று வெவ்வேறு தரங்களின் கீழ் அறிமுகமான இவைகளின் மிகவும் தனித்துவமான பண்பு அவற்றின் அதிக பாகுத்தன்மை ஆகும். இது சிறந்த இன்ஜின் பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் பராமரிப்பு செலவுகளை கணிசமாகக் குறைக்கிறது மற்றும் இன்ஜினின் ஆயுட்காலம் நீட்டிக்கும் என தெரிவிக்கின்றனர்.
யூனோ மிண்டாவின் உயர்தர வாகன இன்ஜின் ஆயில்கள், 100சிசி – 125சிசி பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மினரல் கிரேடு பெர்ஃபோமேக்ஸ் என்ற பெயரிலும் 125சிசி- 150 சிசி பைக்குகளுக்கான செமி ஸின்தடிக் இன்ஜின் ஆயில் ப்யூரோசிந்த் என்ற பெயரிலும் மற்றும் அல்டிமோ என்ற பெயரில் 150சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட பைக்குகளுக்காக வெளியிடப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, ராயல் E குறிப்பாக UCE இன்ஜினுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு (கிளாசிக் & புல்லட் 350) பரிந்துரைக்கப்படுகிறது.
அறிமுகம விழாவில் பேசிய திரு. ராகேஷ் கெர் – முதன்மை அதிகாரி ஆஃப்டர் மார்க்கெட் “ யூனோ மிண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்க உறுதி பூண்டுள்ளது. மேலும் பிரீமியம் தர சேர்க்கைகளைப் பயன்படுத்தி கார்பன் தடயத்தைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது. இந்த BS VI-இணக்கமான ஆட்டோமோட்டிவ் இன்ஜின் ஆயில்கள் M3 “அதிக ஆயுள், அதிக மைலேஜ் மற்றும் அதிக செயல்திறன்” என்ற எங்கள் குறிக்கோளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்-செயல்திறன் கொண்ட லூப்ரிகண்டுகள் வாகனங்களுக்கு உடனடி தொடக்கம், பிக்-அப், மென்மையான ஓட்டுதல் மற்றும் சிறந்த எரிபொருள் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் விளைவாக முதல் பயன்பாட்டிலிருந்து ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது. வழக்கமான பயன்பாட்டின் மூலம் மேம்பட்ட எஞ்சின் ஆயுளை நுகர்வோர் எதிர்பார்க்கலாம். எங்கள் தயாரிப்புகளின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இவை 100% சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஈயம் இல்லாத கொள்கலன்களில் கிடைக்கும். இந்த இன்ஜின் ஆயில்களின் செயல்திறன் 10,000 கிலோமீட்டர்கள் வரை சோதிக்கப்பட்டது. வணிக ஓட்டுனர்களுக்கு இது மிகவும் சிக்கனமானதாகும். இந்த புதிய தலைமுறை BS VI லூப்ரிகண்டுகள் உங்கள் அருகிலுள்ள வாகனக் கடைகளில் கிடைக்கின்றன என்றார்.