சென்னையில் சியட் நிறுவனத்தின் முழ தானியங்கி கிடங்கு
முழ தானியங்கி கிடங்கை சியட் நிறுவனம் துவங்கியது
ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முதன்மை டயர் தயாரிப்பு நிறுவனமான சியட் , அதன் அதிநவீன முழு தானியங்கி கிடங்கை சென்னையில் திறந்து வைத்துள்ளது. இரண்டு லட்சம் ஃபினிஷ்ட் டயர்களின் கொள்ளளவு கொண்ட இந்தக் கிடங்கு , அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு அல்லது மூன்று மடங்கு விரிவாக்கப்படும் என்று சியட் சமீபத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய கிடங்கு, டயர்களை தானாகவே சேமிக்கவும், மீட்டெடுக்கவும் மற்றும் சரியான டிரக்கிற்கு அனுப்பவும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது டயர்களின் தவறான வினியோகத்தை தவிர்க்கும்.இதன் விளைவாக வாடிக்கையாளர் திருப்தி அதிகரிக்கும் .
முழுமையான தானியங்கு கிடங்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை மீறி, மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் தயாரிப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த புதிய கிடங்கு அதை அடைய எங்களுக்கு உதவும் என்று சியட் தலைமை இயக்க அதிகாரி அர்னாப் பானர்ஜி கூறினார்.
CEAT இன் முதலாவது முழுமையான தானியங்குக் கிடங்கின் திறப்பு விழா, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கிய பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது.
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு, CEAT தயாரிப்பு மேம்பாட்டில் தங்கள் தரத்தைப் பேணுவதில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியட் 41 மில்லியனுக்கும் அதிகமான உயர் செயல்திறன் கொண்ட டயர்களை உற்பத்தி செய்கிறது. இரண்டு, முச்சக்கர வண்டிகள், பயணிகள் மற்றும் பயன்பாட்டு வாகனங்கள், வணிக மற்றும் ஆஃப்-ஹைவே வாகனங்கள் போன்ற அனைத்து பிரிவுகளுக்கு டயர்கள் தயாரிக்கும் இந்தியாவின் ஓர் மிக பெரிய நிறுவனம் சியட்.