பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது சேட்டக் மின்சார ஸ்கூட்டரில் புதிய பிரீமியம் ரகத்தை 3 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேட்டக் என்றபெயரில் ஏற்கெனவே மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ரூ.1.22 லட்சம் (பெங்களூரில் எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்து வருகிறது.
தற்போது மின்சார வாகன உற்பத்தி, விநியோகத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதற்காக `சேட்டக் பிரீமியம் 2023’எடிஷன் வாகனத்தை 3 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும்10 ஆயிரம் சேட்டக் மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேட்டி கோர்சி கிரே, மேட்டி கரீபியன் ப்ளூ, சாட்டின் பிளாக் ஆகிய வண்ணங்களில் 2023 எடிஷன் சேட்டக் கிடைக்கிறது. மேலும் பல வண்ண எல்இடி கன்சோல் டிஸ்பிளே, இரு வண்ண சீட், ஸ்கூட்டரின் வண்ணத்திலான கண்ணாடிகள், கருப்பு நிற பின்பக்க கைப்பிடி, பாதங்களை வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை இதில்பொருத்தப்பட்டுள்ளன. புதிய சேட்டக் பிரீமியம் 2023 எடிஷன் ஸ்கூட்டர் ரூ.1.52 லட்சம் (பெங்களூரு எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
சேட்டக் எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைத்து வருகிறது. இதை85 நகரங்களில் 100 ஷோரூம்களில் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டுள் ளது.
மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வடிவமைத்து தயாரித்த மிராக்கிள் ஜிஆர் மற்றும் டெக்ஸ்ஜிஆர் ஆகிய மின்சார வாகனங்களை மைக்ரோ-மொபிலிட்டியில் முன்னோடியான யூலு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. யூலு நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்ப திறமை, பஜாஜ் ஆட்டோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தித் திறன் ஆகியவை இணைந்து இந்த தயாரிப்புகள் நகர்ப்புற நகர்வு சந்தையில் புரட்சியை ஏற்படுத்தவும், இரு நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்புகிடைக்கவும் வழிவகுத்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.