News

டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது

டாடா டியாகோ NRG CNG விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ என்ஆர்ஜியின் சிஎன்ஜி வெர்ஷன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டியாகோவின் சிஎன்ஜி ரூ.7.40 லட்சத்தில் தொடங்கி ரூ.7.80 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. XT மற்றும் XZ  பெட்ரோல் மாடலை விட Tiago NRG கார் ரூ.90,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

CNG மாடல் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் 86hp மற்றும் 113Nm மற்றும் CNG முறையில் 73hp மற்றும் 95Nm வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. டிகோர் சிஎன்ஜி காரில் உள்ளதை போல டியாகோ மாடலும் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.49 கிமீ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

XZ வேரியண்டில் ஃபாக்ஸ் ரூஃப் ரெயில்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள், ஒரு கருப்பு-அவுட் பி-பில்லர் மற்றும் விங் கண்ணாடிகள், 15-இன்ச் ஸ்டீல் வீல்கள், உடலின் கீழ் பகுதி மற்றும் சக்கர வளைவுகளுக்கு மேலாக கருப்பு நிற பிளாஸ்டிக் உறைப்பூச்சு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் ஆகியவை அடங்கும்.

டியாகோ என்ஆர்ஜி சிஎன்ஜியில் ஃபோக் விளக்குகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், கூல்டு க்ளோவ்பாக்ஸ், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பகல்-இரவு பின்புற கண்ணாடி ஆகியவை பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button