அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய நடுத்தர வணிக வாகனத்தை (ICV) “பார்ட்னர் சூப்பர்” (Partner Super) என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது
இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தி நிறுவனமுமான அசோக் லேலண்ட் [Ashok Leyland,] புதிய நடுத்தர (இடைநிலை) வணிக வாகனத்தை (ICV) “பார்ட்னர் சூப்பர்” [Partner Super] என்ற பெயரில் 914, 1014 மற்றும் 1114 என்ற மாடல்களை முறையே 9.15 டன், 10.25 டன் மற்றும் 11.28 டன் மொத்த வாகன எடைப் பிரிவில் (GVW) அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வாகனம், ஓட்டுநருக்கு சிறந்த வசதியையும், செளகரியத்தையும் வழங்குவதற்காக, தற்காலத்துக்கு ஏற்ற சாய்வு-திறன் கொண்ட டில்ட்-ஏபிள் டே கேபினுடன் [tilt-able day cabin] வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பிரிவிலேயே சிறந்த எடைத் திறனைக் [payload capacity] கொண்டுள்ளது. பார்ட்னர் சூப்பர் வாகனம், சிறந்த மைலேஜைத் தரக் கூடியது. இ-காமர்ஸ், குளிர் பானங்கள், எஃப்எம்சிஜி, வைட்குட்ஸ் எனப்படும் குளிர்சாதனங்கள் போன்ற மின்சாதனப் பொருட்கள், பார்சல்கள், பழங்கள் [e-commerce, beverage, FMCG, whitegoods, Parcel, Fruits] போன்ற சுமை ஏற்றும் பயன்பாடுகளில் வாடிக்கையாளர்களின் தேவைகளை வாடிக்கையாளர்களின் எதிர்பார்புக்கேற்றவகையில் பூர்த்தி செய்யும். இது வேகமானது மற்றும் குறுகிய, நெரிசலான சாலைகளிலும் கூட மிகச் சிறப்பான செயல்திறனை உறுதி செய்யும் வகையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரவுத் தலைவர் திரு. சஞ்சீவ் குமார், (Sanjeev Kumar, Head- MHCV, Ashok Leyland), “வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் வாடிக்கையாளர்களின் மொத்த உரிமையாளர் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் வகையில் இந்தப் பிரிவில் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தை அசோக் லேலண்ட் கொண்டுள்ளது. இந்தப் பிரிவில் வாகனத் தயாரிப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நடுத்தர (இடைநிலை) வணிக வாகனப் பிரிவில் (ICV) எங்கள் தயாரிப்புகளை விரிவுபடுத்துகிறோம். அந்த முயற்சியில், ஒரு பகுதியாக ’பார்ட்னர் சூப்பர்’ என்ற இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மாறுபட்ட வகைத் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் உலக அளவில் சிறந்த, முதல் 10 வணிக வாகன உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை உறுதி செய்ய இந்த வேகத்தில் எங்கள் செயல்பாடுகளைத் தொடர விரும்புகிறோம்.” என்றார்.
பார்ட்னர் சூப்பர் வாகனத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
• தற்காலத்திற்கு ஏற்ற சாய்வுடன் கூடிய டில்ட்-ஏபிள் டே கேபின் [Contemporary tilt-able Day cabin]
• இந்த வாகனப் பிரிவிலேயே சிறந்த எடைத் திறன் [Best-in-class payload]
• இந்த வாகனப் பிரிவில் சிறந்த மைலேஜ்
• இந்த வாகனப் பிரிவில் சிறந்த சக்தி (104 கிலோ வாட் (140 ஹெச்பி)) [Best-in-class power (104 kW (140 hp))]
• எடை ஏற்றுதல் இடைவெளி விருப்பங்கள் [Loading span options] – 4.3 மீ (14 அடி), 5.2 மீ (17 அடி), 6.2 மீ (20 அடி) மற்றும் 6.8 மீ (22 அடி)
• முதல் ஆண்டு இலவச ஐ-அலர்ட் சந்தா [i-alert subscription]
• 4 ஆண்டுகள் மற்றும் 4 லட்சம் கிலோ மீட்டர் டிரைவ்லைன் உத்தரவாதம்