NewsScooter

மதுரையில் ஏத்தர் அனுபவ மையம் திறப்பு

ஏத்தர் அனுபவ மையம் திறப்பு

இந்தியாவின் முதல் அறிவார்ந்த மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏத்தர் எனர்ஜி, அதன் முதல் அனுபவ மையமான ஏத்தர் ஸ்பேஸை மதுரை அளவை நகரில் திறந்துள்ளது. இந்த ஏத்தர் ஸ்பேஸ், ஏஆர்சி குழுமத்துடன் இணைந்து, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும். இந்த புதிய அனுபவ மையம் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 பிளஸ் – ன் புதிய 3வது ஜெனரேஷன் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும்.

ஏத்தர் ஸ்பேஸ் முழுமையான சேவை மற்றும் உரிமையாளர்களுக்கான ஆதரவுடன் தனித்துவமான உரிமை அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அனுபவ மையம், வாகனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றி வாடிக்கையாளர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு டைனமிக், தொட்டுணரக்கூடிய மற்றும் உரையாடி தெரிந்து கொள்ளும் இடமாகும். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வாகனத்தின் பாகங்கள் பல்வேறு பகுதிகளின் முழுமையான கண்ணோட்டத்தை வழங்குகிறது. நகரத்தில் உள்ள நுகர்வோர் அனுபவ மையத்திற்கு செல்வதற்கு முன்பு, ஏத்தர் எனர்ஜியின் இணையதளத்தில் டெஸ்ட்-ரைடு ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

நிகழ்ச்சியில் பேசிய ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி திரு.ரவ்னீத் சிங் போகேலா கூறுகையில், “ஏத்தர் இ-ஸ்கூட்டர்களுக்கு, தமிழ்நாடு மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு அதிக அளவில் இவி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஜென்-3 450 இயங்குதளத்தின் வெளியீடு மாநிலத்தில் உள்ள பரந்த அளவிலான நுகர்வோர் மத்தியில் அதிக ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் புதிய அனுபவ மையம் மூலம், நகரின் நுகர்வோர் தேவையை இப்போது பூர்த்தி செய்ய முடியும். நாடு முழுவதும் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக எங்கள் விநியோக சங்கிலியை மேம்படுத்துவதில் நாங்கள் வியூக ரீதியாக முதலீடு செய்துள்ளோம். இது மாநிலத்தில் வாகனங்களின் காத்திருப்பு காலகட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க வழிவகுத்தது.”

ஏஆர்சி குழுமத்தின் இயக்குனர் திரு. சித்தார்த் சிஎஸ் கூறுகையில் “பாரம்பரியமாக உள்ள வாகன இயக்கத்தில் பெரும் இடையூறுகள் ஏற்படுவதால், குறிப்பாக இரு சக்கர வாகன துறையில் இ-மொபிலிட்டியின் வேகம் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. ஏத்தர் நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அபாரமான பணிகளை செய்து வருகிறது. ஏஆர்சி குழுமத்தின் நிபுணத்துவத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன். தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் இதுபோன்ற முன்னோடிகள் மற்றும் கேம் சேஞ்சர்களுடன் இணைந்திருப்பதில் ஏஆர்சி குழுமம் மகிழ்ச்சியடைகிறது”.

ஏத்தர் எனர்ஜி தமிழ்நாட்டுடன் ஒரு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. மேலும் மாநிலத்தில் இவிகளுக்கு சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு வியூக ரீதியாக முதலீடு செய்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், ஏத்தர் தனது முதல் அனுபவ மையத்தை சென்னையில் திறந்தது.

#automobileindustry #electricvehicles #ev #ather #experiencecentre #inauguration #madurai

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button