இந்தியாவின் லாஜிஸ்ட்டிக் துறையை மேம்படுத்துவதன் மூலம், இந்திய வர்த்தகம், தொழில் மற்றும் அந்நியச் செலாவணியை மேம்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் மோடி கடந்த செடம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது, இந்தியாவின் தேசிய லாஜிஸ்ட்டிக் கொள்கை 2022 (New Logistics policy 2022).
இந்தியாவில் லாஜிஸ்ட்டிக் துறைக்கு சரியான நிர்வாக அமைப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறை இல்லாததை சரிசெய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய லாஜிஸ்ட்டிக் கொள்கை. இது ஏற்கெனவே ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, மணிப்பூர் போன்ற 14 மாநிலங்களில் மாநிலக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அது தவிர, 13 மாநிலங்கள் வரைவு நிலையிலும் உள்ளன.
இந்நிலையில், புதிய தேசிய லாஜிஸ்ட்டிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டிலேயே இந்த வரைவுக் கொள்கை தயாரானபோதும், பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தக் கொள்கை நடைமுறைக்குக் கொண்டு வருவது தள்ளிக்கொண்டே போனது. தற்போது, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் கதிசக்தி-யுடன் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது உலகின் ஐந்து மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. ஏறக்குறைய, இந்திய லாஜிஸ்ட்டிக் துறை மதிப்பு ஆனது 200 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய லாஜிஸ்ட்டிக் துறையை உயர்த்துவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி, வாணிபம் மற்றும் லாஜிஸ்ட்டிக் துறையின் பகுதிகளாக உள்ள போக்குவரத்து, பல்வேறு கமாடிட்டி பொருள்களின் பாதுகாப்பு, இருப்பு மேலாண்மை போன்ற துறையின் உள்கட்டமைப்பையும் உலகத் தரத்திற்கு உயர்த்துவது ஆகும்.
தேசிய லாஜிஸ்ட்டிக் கொள்கையானது, இந்தத் துறைக்கு ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லாஜிஸ்ட்டிக் துறை அம்சங்களான போக்குவரத்து, கிடங்கு மற்றும் சரக்குகளைப் பராமரிக்கும் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்கிறது. 2024-25 நிதியாண்டிற்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுவதை இலக்காக உள்ள நிலையில், இக்கொள்கை வணிக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்…
* இணையமயமாக்கல், மறு-பொறியியல் மற்றும் பல மாதிரி போக்குவரத்து ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களில் இந்தக் கொள்கை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
* மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்கள், பல்வேறு அமைச்சகங்களால் திட்டமிடப்பட்ட திட்டங்களை உள்ளடக்கிய லாஜிஸ்ட்டிக் தேவைகளுக்கான திட்டத் தயாரிப்பு இணைப்புக்கு உதவும்.
* ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கை மற்றும் ஒழுங்குமுறைச் சூழல், ஆரம்பம் முதல் இறுதி வரையிலான லாஜிஸ்ட்டிக் சேவைகள் மற்றும் லாஜிஸ்ட்டிக் துறையை நிர்வகிக்கும் மற்றும் அதன் போட்டித்தன்மையை மேம்படுத்தும்.
* ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அமைப்பை (Integrated Digital System) அறிமுகப்படுத்துகிறது. இணையத்தரவு ஒருங்கிணைப்பு என்பது இந்தக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். இது பல்வேறு துறைகளின் அமைச்சகங்களுக்குச் சொந்தமான தரவுகளை ஒரேதளத்தில் ஒருங்கிணைக்க உதவுவது. மலிவான, வேகமான மற்றும் பாதுகாப்பான லாஜிஸ்ட்டிக் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் லாஜிஸ்ட்டிக் அமைப்பை உருவாக்க, லாஜிஸ்ட்டிக் செயல்முறைகளை எளிதாக்குவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
* கணினி மேம்பாட்டுக் குழுவானது (System Improvement Group) உருவாக்கப்பட்டு உள்ளது. லாஜிஸ்ட்டிக் புராஜெக்ட்டுகள் தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து கண்காணிக்கவும், பயனர் எதிர்கொள்ளும் பிரச்னைக்குத் தீர்வு காண, இந்த அமைப்பு பயன்படுத்தப்படும் மற்றும் எந்த தடையையும் அகற்ற உதவும்.
* பல்முனை லாஜிஸ்ட்டிக் மாதிரி பூங்காக்கள் (Multi-modal Logistics Parks) ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. சாலைகள், ரயில்வே மற்றும் நீர் வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வகை போக்குவரத்தை ஊக்குவிப்பது மற்றும் பிற லாஜிஸ்ட்டிக் அம்சங்களை மேம்படுத்துவது மற்றும் மேலாண்மை இந்தக் கொள்கையின் பிரதான நோக்கமாகும். இது தரநிலைகள், தரப்படுத்தல்மற்றும் மதிப்பீடு, தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட தீர்வுகளை ஏற்றுக்கொள்வது போன்ற முக்கியமான அம்சங்களைக் கையாளும்.
முக்கியமான நோக்கங்கள்…
* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில், லாஜிஸ்ட்டிக்ச் செலவு சுமார் 13-14 சதவிகிதமாக உள்ளதை ஒற்றை இலக்கித்திற்குக் கொண்டுவருவது.
* இந்திய லாஜிஸ்ட்டிக் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவது.
*விரைவான மற்றும் மலிவு விலையில் லாஜிஸ்ட்டிக் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது
* போக்குவரத்தில் உள்ள பல போக்குவரத்து வழிகளையும் ஒருங்கிணைத்து ஒர் தளத்தில் செயல்பட வைப்பது.
முக்கியமான அம்சங்கள்இந்தியாவை நோக்கித் திரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
* இணைய வழி லாஜிஸ்ட்டிக் அமைப்பை ஊக்குவிப்பது.
* உலக முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக, இந்தியாவை மாற்றுவது
* உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் இந்தியப் பொருள்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பது என பல நோக்கங்கள், சிறப்பம்சங்களுடன் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது இந்தக் கொள்கை.
#logistics #policy #globalmarkets #competition