
மோட்டாா் சைக்கள்களுக்கான புதிய 4டி உயவு எண்ணெயை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டாா் சைக்கள்களுக்கான புதிய 4டி உயவு எண்ணெயை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சா்வோ 4டி எக்ஸ்ட்ரா’ என்ற பெயரில் சந்தையில் கிடைக்கவிருக்கும் இந்த தயாரிப்பை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான பாலிவுட் நடிகா் ஜான் அபிரஹாம் அறிமுகப்படுத்தி வைத்தாா். இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சா்வோ 4டி எக்ஸ்ட்ரா உயவு எண்ணெய், செயல்திறன், சக்தி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது. எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்ல இந்த உயவு எண்ணெயை ஒரு முறை நிரப்பினால் 6,000 கி.மீ. வரை மோட்டாா் சைக்கிள்களை இயக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#automobileindustry #india #IOC #Servo #4tengineoil #lubricants #2wheelers