
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேசன், நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன், நாமக்கல் மெக்கானிக்கல் அசோசியேசன் மற்றும் நாமக்கல் ஆட்டோ நகர் அசோசியேசன் ஆகிய சங்கங்கள் இணைந்து நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்யா மகால் மண்டபத்தில் துவக்க விழா இன்று கோலாகலமாக துவங்கியது.
நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. வாங்கிலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வரவேற்புரை வழங்கியும் எக்ஸ்போ கொடியை ஏற்றியும் ஆட்டோ எக்ஸ்போவை துவக்கி வைத்தார். அசோக் லேலண்ட் கனரக வாகன பிரிவு தலைமை அதிகாரி திரு. சஞ்சீவ் குமார் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்தியன் ஆயில் சர்வீஸ் பிரிவு துணை பொது மேலாளர் ரவிகுமார், ஜே.கே. டயர்ஸ் மண்டல மேலாளர் சுந்தர், டாடா மோட்டார்ஸ் தென்மண்டல மேலாளர் திரு.பிரசாத், டி.வி.எஸ். ஆட்டோமொபைல் செல்யூசன்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசராகவன், டெய்ம்லர் இந்திய மண்டல மேலாளர் சஹீர் ரஹ்மான், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கலந்து கொண்டனர். நமது மோட்டார் பத்திரிகையின் செப்டம்பர் மாத இதழ் வெளியிடபட்டது. துவக்க விழா முடிவில் நாமக்கல் எக்ஸ்போ செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.”
“கண்காட்சியில் இந்தியாவில் உள்ள முன்னனி மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள், லூப்ரிகண்ட் / ஆயில் தயாரிப்பு கம்பெனிகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், டயர் கம்பெனிகள், பேட்டரி கம்பெனிகள், தார்பாய், ஜிபிஎஸ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து தங்களின் தயாரிப்புகளை காட்சி படுத்தினர். தமிழகம் முழுவதும் இருந்து திரளான லாரி, பஸ், ட்ரெய்லர், டேங்கர், ஆட்டோ பாக தயாரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். 18ம் தேதி கண்காட்சியின் நிறைவு விழா நடைபெறும்”



