பிரேக்ஸ் இந்தியா அறிமுகப்படுத்தும் உயர் செயல்திறன் கொண்ட “எலைட்” ஃபிரிக்க்ஷன் பிரேக்பேட்கள்
Brakes India launches "Elite" Brake Pads.
அதிக வேகம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட பிரேக்பேட்களை பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
TVS Apache பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய “எலைட்” பிரேக்பேட்கள் சிறந்த செயல்திறன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. TVS Apache “Elite”
பிரேக்பேட்கள், ABRACOAT தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டவை. இந்த பிரேக்பேட்கள் இந்தியாவில் முதன்முறையாக, தனித்துவமான அதிக உராய்வு செயல்திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்ந்த சிவப்பு நிறத்தில் வர்ணம்பூசப்பட்டு மற்றும் மேற்பரப்பில் உள்ள கோடுகளால் எளிதில் பிரித்தறியப்படுகின்றன.
பிரேக்ஸ் இந்தியா, ஃபிரிக்க்ஷன் & ஆஃப்டர்மார்க்கெட் பிசினஸ் யூனிட்டின் துணைத் தலைவர் திரு. சுஜித்நாயக் கூறுகையில், “டிவிஎஸ் அப்பாச்சி உள்நாட்டு பயணிகள் கார் மார்க்கெட்டில் ஃபிரிக்க்ஷன் பாக தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. “எலைட்” பிரேக்பேட்களை உருவாக்க எங்கள் நிறுவனத்தின் ஆய்வுக் குழுவையும் அதி நவீன உற்பத்தி வசதியையும் பயன்படுத்தியுள்ளோம். அதிக செயல்திறனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த பிரேக்பேட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எலைட் ரேஞ்ச் பிரேக்பேட்கள், தேர்வுக்கு ஏற்றால் போல் ஆர்கானிக், ஸ்டீல் அல்லது செராமிக் உராய்வுப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவை ஒவ்வொன்றும் ABRACOAT தொழில்நுட்பத்துடன் சிறந்த செயல்திறனை வழங்கும்.
“எலைட்” ரேஞ்ச் தவிர, TVS Apache – இல் சிறந்த வசதிக்காகவும், தினசரி ஓட்டுவதற்குகாகவும் “சூப்பர்” பிரேக்பேட் மற்றும் குறைந்த செலவில் நீடித்து நிலைத்து இருப்பதற்காகவும், நீடித்த ஆயுளுக்காகவும் “டியூரா” பிரேக்பேட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்பேட்கள் TVS Apache ரோட்டர்களுடன் பயன்படுத்தப்படும்போது மிகச் சிறந்த முறையில் செயல்படும்.
பிரேக்ஸ் இந்தியா :
பிரேக்ஸ் இந்தியா, ஆட்டோமொபைல் மற்றும் இதர துறை பயன்பாடுகளுக்கான பிரேக்கிங் பாகங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இது உள்நாட்டு OEM சந்தையில் 60%க்கும் மேல் பங்கு வகிக்கிறது. OEM தளத்தில் ஒரு வலுவான போட்டியாளராக இருப்பதைத் தவிர, பிரேக்ஸ் இந்தியா ஃபிரிக்க்ஷன், ஃபிரிக்க்ஷனல்லாத பொருட்கள் மற்றும் ஃபுளூயிட் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
மேலும் விபரங்களுக்கு www.tvsgirling.com



