அசோக் லேலண்ட்-ன் இந்தியாவின் முதல் 9 -வேக டிப்பர் அறிமுகம்
Ashok Leyland Launches 9 Speed AMT AVTR 2825 Tipper

இந்துஜா குழுமத்தின் முதன்மையான மற்றும் இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட், சமீபத்தில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட AVTR 2825 இந்தியாவின் முதல் டிப்பரை அறிமுகப்படுத்தியது. தனது முதல் வணிக டிரக் தளமான கிக்ஷிஜிஸி இன் தொடக்கத்திலிருந்து, அசோக் லேலண்ட் ஓட்டுநர் வசதியை மேம்படுத்துவதிலும், சிறந்த எரிபொருள்-திறனுள்ள தயாரிப்புகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது, இதனால் வாடிக்கையாளர் லாபத்தை அதிகரிக்கிறது. 9 வேக (AMT) கொண்ட புதிய ஏவிடிஆர் 2825 ஆனது வெவ்வேறு பரிமாற்ற முறைகளில் (தானியங்கி மற்றும் கைமுறையாக) இயங்கக்கூடியது மற்றும் அதன் அக்சிரலேஷன் அடிப்படையிலான கியர் ஷிஃப்டிங் மூலம் அதிக எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது.
ஏவிடிஆர் 2825 டிப்பரில் உள்ள ஏஎம்டியின் நவீன தொழில்நுட்பம், ராக்-ஃப்ரீ மோட் மற்றும் ஒருங்கிணைந்த ஹில்-ஸ்டார்ட்-எய்ட் போன்ற அதன் தனித்துவமான அம்சங்களுடன் ஓட்டும் அனுபவத்தை எளிதாக்குகிறது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் டிப்பர்கள் சவாலான சூழலில் இயங்கும் போது ஓட்டுனரின் சோர்வையும் மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.
இந்த சமீபத்திய வளர்ச்சி குறித்து பேசிய MHCV தலைவர் திரு. சஞ்சீவ் குமார், “MHCV தளத்தில், டிப்பர்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாகும். மேலும் அவை நம் நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு உந்து சக்தியாக உள்ளன. டிப்பர்கள் பெரும்பாலும் கடினமான சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு இயக்கப்படுகின்றன, எனவே அவை மிகவும் பணிச்சூழலியல் ரீதியாக நம்பகமானதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட OEM என்ற முறையில், வலிமை மற்றும் நம்பகத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த டிரக்குகளை பயனருக்கு மிகவும் வசதியாக மாற்றினோம். ‘ஆப்கி ஜீத், ஹமாரி ஜீத்’ என்ற எங்களின் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய டிப்பர்கள், இயக்கத்தை எளிதாக்குவதை உறுதி செய்வதோடு, ஓட்டுநர்களின் சோர்வைக் கணிசமாகக் குறைக்கும். கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸின் அதிகரித்த ஆயுட்காலம், விரைவான டர்ன்அரவுண்ட் நேரம், கூடுதலாக எங்கள் வாடிக்கையாளர்களின் வணிகத்தையும் லாபத்தையும் மேம்படுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.