பிரேக்ஸ் இந்தியா விரைவு பிரேக் சேவைக்கு மேலும் 65 மையங்கள் திறப்பு
Qik brake service expanded to 65 centres across India

![]()
நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தியாளரான பிரேக்ஸ் இந்தியா தனது தனித்துவமான முயற்சியான ‘குவிக்’ பிரேக் சர்வீஸ் சேவையை இந்தியா முழுவதும் 65 மையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இந்திய முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 40 நகரங்களில் உள்ள கியூ.பி.எஸ். (‘குவிக்’ பிரேக் சர்வீஸ்) எனப்படும் இந்த சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் விரைவாக தங்கள் வாகனங்களின் பிரேக்- ஐ பரிசோதித்து கொள்ளலாம். மேலும், பிரேக் திரவம் மற்றும் ரேடியேட்டர் குளிரூட்டியின் டாப்-அப், ரோட்டர்கள், ப்ரிக்ஸன் பேட்ஸ், லைன்டு ஷூ, டிஸ்க் பிரேக் கேரியர் மற்றும் ஸ்லைடிங் பின் கிட் ஆகியவற்றை மாற்றுவது போன்ற சேவைகளையும் பெறலாம்.
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில், டயர் மாற்றம், பேலன்ஸ்யிங், பிரேக் பேடுகள் அல்லது லைனிங் மாற்றுதல், பிரேக் திரவம், கூலன்ட் உள்ளிட்ட சேவைகளை விரைவாக முடித்து தர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்கள்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், அணைத்து நிறுவனங்களின் வாகனங்களையும் பழுது பார்க்கும் நியூட்ரல் கேரேஜ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தரமான விறபனைக்கு பிறகான சேவையின் தேவையும் அத்யாவசியமாகியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில், பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள டயர் டீலர்கள் மற்றும் வீல் அலைன்மெண்ட் மையங்களுடன் இணைந்து டிஸ்க் பேட்கள் மற்றும் ரோட்டர்களை விரைவாக சரி செய்து தர ஏற்பாடு செய்துள்ளது. தனி முதலீடு இல்லாமல் கூடுதல் வேலைகளை பெற்று தருவதால், இந்த முயற்சி டயர் டீலர்கள் மற்றும் வீல் அலைன்மென்ட் சென்டர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
திரு. சுஜித் நாயக் (துணைத் தலைவர் & தலைவர் – ஃபிரிக்க்ஷன் & ஆஃப்டர் மார்க்கெட் பிசினஸ் யூனிட், பிரேக்ஸ் இந்தியா) இந்த சேவையை குறித்து கூறும்போது வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்புக்கு பிரேக் மிக முக்கியமானதாக உள்ளது. அதற்கு சரியான இடைவெளியில் உரிய கவனம் செலுத்துவது அவசியம். எங்கள் பிராண்டுகளான டி.வி.எஸ் க்ரிலிங் பார்ட்ஸ், டி.வி.எஸ் அப்பாச்சி பிரிக்ஸன், டி.வி.எஸ் ஸ்ப்ரிண்டர் பிலுய்ட்ஸ் ஆகியவை தரம், நீண்டகால பயன்பாடு மற்றும் அதிக செயல்திறனை உறுதி செய்கின்றன. எனவே, நங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தரமான பிரேக் சேவையை வழங்குவதற்காக இந்த தனித்துவமான முயற்சியை தொடங்கினோம். குறிப்பிட்டுள்ள சேவைகளை வாடிக்கையாளர்களின் முன்பே 30-45 நிமிடங்களுக்குள் செய்ய முடியும்.
விரைவு பிரேக் சேவை 2018 இல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிரபலமான மாடல்களை கொண்டிருந்ததால், பல்வேறு வகையான வாகன உரிமையாளர்களுக்கு சேவைகளை தந்து பெரும் அளவில் கியூ.பி,எஸ். வளர்ந்து உள்ளது. கியூ.பி,எஸ். சேவை நிலையங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த துறையில் 60 வருடம் அனுபவம் உள்ள பிரேக்ஸ் இந்தியாவினால் பயிற்சி பெற்றவர்கள்.
வாகன உரிமையாளர்கள் விரைவு பிரேக் சேவையை குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தின் மூலம் அவர்களுக்கு அருகில் உள்ள சேவை நிலையத்தை அணுகி பதிவு செய்யலாம் – https://tvsgirling.com/book-a-quick-brake-service/.
பிரேக்ஸ் இந்தியா-வை பற்றி
TVS குழுமத்தின் அங்கமான பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் வாகனங்கள் மற்றும் இதர பயன்பாட்டிற்கான பிரேக்கிங் கருவிகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு அசல் உபகரண உற்பத்தி சந்தையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், உற்பத்திக்கு பிறகான பிரேக்கிங் சேவைக்கு தேவையான பிரிக்க்ஷன், நான்-பிரிக்க்ஷன், பிலிட்டிஸ் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தகவலுக்கு www.tvsgirling.com-ஐப் பார்வையிடவும்.



