


தமிழகத்தில் ஆம்பியர் மின் வாகனங்களுக்கான அனுபவ மையம் திறப்பு
பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர், அதன் முதல் எலெக்ட்ரிக் வாகன அனுபவ மையத்தை தமிழகத்தில் திறந்து வைத்திருக்கின்றது. நாட்டில் மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் மிக சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் நாட்டு மக்களைக் கவரும் பொருட்டு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அதன் முதல் அனுபவ மையத்தை (experience centre) திறந்து வைத்திருக்கின்றது. ராணிபேட் பகுதியிலேயே புதிய அனுபவ மையம் திறக்கப்பட்டிருக்கின்றது. கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்திற்கு சொந்தமானதே ஆம்பியர் நிறுவனம். இந்நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தென்னக மக்களைக் கவரும் பொருட்டு அதன், மெகா மின் வாகன உற்பத்தி மையம் இருக்கும் பகுதியில் அனுபவ மையத்தை திறந்து வைத்திருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தி பார்ப்பதற்கான அனைத்து சிறப்பு வசதிகளும் இந்த மையத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், தயாரிப்புகள் என்ன மாதிரியான தரம் கொண்டவை என்பதை மிக சுலபமாகதெரிந்துக் கொள்ள முடியும். இத்துடன், டிஜிட்டல் கருவிகளையும் அனுபவத்தை மிக எளிமையாக வழங்கும் நோக்கில் அந்த மையத்தில் நிறுவனம் நிலை நிறுத்தி இருக்கின்றது. எனவே ஓர் நுகர்வோர் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து தகவல்களும் அனுபவ மையத்தில் தெளிவாகவும், சுலபமாகவும் கிடைக்கும் என்பது தெரிகின்றது. ஓர் வாடிக்கையாளரைக் கவர இது போதுமானது. தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய அனுபவ மையத்தின் தொடக்கம் குறித்து கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ நாகேஷ் ஏ பசவனஹள்ளி கூறியதாவது, “ராணிப்பேட்டையில் உள்ள நிறுவனத்தின் மெகா மின் வாகன உற்பத்தி தளம் மற்றும் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மின் வாகன அனுபவ மையம் ஆகியவை இந்தியாவின் பசுமை இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது” என்றார்.
“மிக சிறப்பான தயாரிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பிற தேவைகளை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்ற கூடுதல் கருத்தையும் அவர் முன் வைத்தார். இதன் வாயிலாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆம்பியர் நிறுவனம் அனுபவ மையம் மட்டுமின்றி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், இன்னும் பல சிறப்பான செயல்பாட்டில் நிறுவனம் மிக விரைவில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பன்முக மின்சார இருசக்கர வாகன தேர்வுகளை தொடர்ச்சியாக இந்தியாவில் களமிறக்கி வருகின்ற காரணத்தினால் நாட்டின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஆம்பியர் மாறியிருக்கின்றது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு புதிய மாடல்களை நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டதே இந்நிறுவனம். அதே ஆண்டில் மூன்று மின்சார மாடல்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இதைத் தொடர்ந்து, ஏராளமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆம்பியர் நிறுவனம் ரியோ, ரியோ எலைட், வி சீரிஸ், எம் சீரிஸ், ஜூல் இஎக்ஸ் மற்றும் மேக்னஸ் ப்ரோ ஆகிய மின்சார ஸ்கூட்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. மணிக்கு 25 கிமீ முதல் 55 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்ற மின்சார டூ-வீலர்களை ஆம்பியர் விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றுடன், தொடர்ச்சியாக சந்தையில் முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல புதிய மாடல்களை ஆம்பியர் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய அனுபவ மையத்தை நிறுவனம் தற்போது திறந்து வைத்திருக்கின்றது.
#automobileindustry #india #ev #AmpereElectric #ExperienceCentre #greavescotton