Truck & Bus

மஹிந்திராவின் சுப்ரோ ப்ராபிட் வகை டிரக்குகள் அறிமுகம்

Mahindra introduces supro trucks

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் தனது புதிய வகை சுப்ரோ ப்ராபிட் வகை டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான சுப்ரோ வகைப் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சரக்கு போக்குவரத்து வாகனங்கள் குறைந்த செலவு, அதிக சக்தி, அதிக சரக்கு சுமக்கும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றைக் கொண்டதாக விளங்குகிறது. இந்த சுப்ரோ வாகனங்கள் அதிக செயல்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றில் இது நன்கு சரிபார்க்கப்பட்டதாகும். மஹிந்திரா பிராண்ட் வழங்கும் நம்பிக்கையுடன், இது சக்திவாய்ந்த ஏசி மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுடன் வருகிறது. சுப்ரோ ரக வாகனங்கள் சக்திவாய்ந்த மற்றும் திறமையான டிஐ டீசல் இன்ஜின்களின் விருப்பத் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

சுப்ரோவின் இந்த வகையான ‘ப்ராஃபிட் டிரக்குகள்’ குறைந்த பராமரிப்பு செலவில் சிறந்த மைலேஜ் மற்றும் சிறந்த பேலோட் திறனை வழங்குகின்றன. சுப்ரோ ப்ராபிட் டிரக் மினி 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் சுப்ரோ ப்ராபிட் டிரக் மேக்ஸி 6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.சூப்பர் ப்ராபிட் டிரக் மினி, மஹிந்திராவின் சக்திவாய்ந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் (டிஐ) டீசல் பிஎஸ்-6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 19.4 கிலோவாட் சக்தியுடன் வருகிறது. இது நான்கு-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர் 909 சிசி டிஸ்பிளேஸ்மெண்ட் இயந்திரத்தைக் கொண்டுள்ளது.இது 26 ஹெச்பி 55 என்எம் டார்க் பவருடன் உற்பத்தி செய்கிறது. இது 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சுப்ரோ ப்ராபிட் டிரக் மினி வகை வாகனங்கள் சிஎன்ஜி விருப்பத் தேர்வுடனும் வருகிறது. இது சக்திவாய்ந்த 20.01 கிலோவாட் (27 பிஹெச்பி) இன்ஜிசினுடன் வருகிறது. இது 60 என்எம் டார்க் பவர் மற்றும் 23.35 கிலோ மீட்டர் சிறந்த மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது. 13 இன்ச் டயர் பயன்படுத்ப்பட்டுள்ளது.

சூப்பர் ப்ரோபிட் டிரக் மினி வகை வாகனத்தில் புதிய டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது கார் போன்ற கியர் ஷிப்ட்-டை வழங்குகிறது. மிகக் கடினமான மற்றும் உறுதி.யான கட்டமைப்பையும் கொண்டு மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்குகிறது.புதிய சூப்பர் ப்ராபிட்ரக் மேக்ஸி 1050 கிலோ அதிக பேலோட், பெரிய ஆர் 14 டயர்கள், 196 மில்லி மீட்டர் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அனைத்தும் புதிய டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது. மஹிந்திராவின் சக்திவாய்ந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் (டிஐ) டர்போ டீசல் பிஎஸ்-6 எஞ்சின் மூலம் சுப்ரோ ப்ராபிட் டிரக் மேக்ஸி இயக்கப்படுகிறது.

இது 35.4 கிலோவாட் சக்தி, 47 ஹெச்பி மற்றும் 100 என்எம் டார்க் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் செயல்திறன் மிக அதிக அளவில் இருக்கும் அதே சமயத்தில், சுப்ரோ ப்ராபிட் டிரக் மேக்ஸி லிட்டருக்கு 21.94 கிலோ மீட்டர் என அதிக மைலேஜ் வழங்குகிறது. சுப்ரோ ப்ராபிட் டிரக் மேக்ஸி ஒரு டெக் பாடி சரக்குப் பெட்டக தேர்வுடன் வசதியான டே கேபினுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஏர் கண்டிஷனிங் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறந்த பிரேக்கிங்கிற்காக சுப்ரோ ப்ராபிட் டிரக் மேக்ஸி வகை வாகனங்கள் டூயல் எல்எஸ்பிவி-யுடன் எக்ஸ் ஸ்பிளிட் பிரேக்குகளுடன் வருகிறது, என்று எம் அண்ட் எம் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொடிவ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி வீஜய் நக்ரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button