ComponentsNews
‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது
Sundaram Fasteners bags Best Supplier Award from GM

‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’ நிறுவனத்திற்கு, ‘2020ம் ஆண்டின் சிறந்த வினியோகஸ்தர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அமெரிக்காவை சேர்ந்த, ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தயாரித்து வழங்குகிறது. இது தவிர, 16 நாடுகளைச் சேர்ந்த 122 நிறுவனங்களும் இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை தயாரித்து வழங்குகின்றன. இதில், கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக வினியோகம் செய்ததற்காக, 2020ம் ஆண்டின் சிறந்த வினியோகஸ்தராக, சுந்தரம் பாஸ்டனர்ஸ் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, 8வது முறையாக இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.



