Truck & Bus

சங்ககிரியில் அசோக் லேலண்ட்-இன் புதிய பிஎஸ்6 ஏவிடிஆர் டிரக் வெளியீடு

சோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் புதிதாக

தயாரிக்கப்பட்டுள்ள ஏவிடிஆர் பிஎஸ்6 கனரக வாகனத்தை சங்ககிரியில் அறிமுகப்படுத்தி முதலாவதாக வாகனங்களை வாங்கியவர்களுக்கு சாவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு. வி செல்வராஜூ தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் கே. கே. நடேசன் அனைவரையும் வரவேற்றார்.

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக நிகழாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து மாசை குறைக்கும் வகையில் பிஎஸ்6 தரக்கட்டுப்பாட்டு வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் நைட்ரஜன் ஆக்சைடு அளவை குறைக்கும் வகையில் எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் புதிய ரக இன்ஜினை வடிவமைத்துள்ளனர். இந்த புதிய இன்ஜின்கள் பொருத்தப்பட்ட அவதார் வாகனங்கள் நவம்பர் 17ஆம் தேதியன்று சங்ககிரியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. விபின் சோந்தி புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி 70 வாடிக்கையாளர்களுக்கு சாவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாளர்கள் அனுஜ் கத்தூரியா, சீனிவாசன், கே. மோகன், செந்தில்வேலன் மற்றும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் என். மோகன் குமார் துணைத்தலைவர் ஆர். ஆர். மோகன்குமார் இணைச்செயலாளர் என். சின்ன தம்பி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், பல லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button