Tractor

தமிழக அரசுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியது  டஃபே 

Tractor manufacturer TAFE donates oxygen concentrators

தமிழக அரசுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியது  டஃபே

மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ரூ.1 கோடி நிதியுதவி

தமிழ்நாட்டின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டஃபே  (TAFE), தமிழக அரசுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) வழங்கியுள்ளது. மேலும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்கு,  டஃபே  நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதியை வழங்கினர்.

கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில், தமிழ்நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் பயன்பெறும் என  நம்புகிறது. ராணிப்பேட்டை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் பகுதிகளில் உள்ள சிறிய மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை விநியோகம் செய்து நிறுவும் பணிகளை தமிழக அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

டஃபே  நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திருமதி. மல்லிகா சீனிவாசன் அவர்கள், “கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மனித சமூகத்தை சொல்லமுடியாத அளவுக்கு துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்பெருந்தொற்றுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு,  டஃபே  தனது ஆதரவை முழுமையாக வழங்குகிறது” என்று கூறினார்.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது,  டஃபே  தனது மேஸி ஃபெர்குஸன் (Massey Ferguson) மற்றும் ஐஷா் ( Eicher ) டிராக்டர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், தனது உற்பத்தி ஆலைகளுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் ஏராளமான உதவிகளை வழங்கியதோடு, இந்த ஆண்டும் அனைவருக்கும் தொடர்ந்து உதவி செய்ய முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button