Tractor

சிறு,குறு விவசாயிகளுக்கு வாடகை டிராக்டா் – டஃபே திட்டம்

TAFE offers free rental tractors

தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வாடகை முறையில் டிராக்டா்கள் பயன்படுத்த அளிக்கும் திட்டத்தை டஃபே நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காலகட்டத்தில் தமிழக அரசுக்கு தொடா்ந்து ஆதரவளிக்கும் நோக்கிலும், தற்போதைய சாகுபடி காலத்தில் தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெறும் வகையிலும் அவா்களுக்காக வாடகை முறையில் இலவச டிராக்டா் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த வாடகை டிராக்டா் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள சுமாா் 50,000 விவசாயிகள் பயன் பெறுவாா்கள். மே மாதம் முதல் ஜூலை வரையில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

இரண்டு ஏக்கா் அல்லது அதற்கும் குறைவாக நிலமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறுவா்.  டஃபே நிறுவனத்தின் மேஸி ஃபெர்குஸன் மற்றும் ஐஷா் ரகத்தைச் சோந்த 16,500 டிராக்டா்கள் விவாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் 26,800 வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும்.

தமிழக அரசின் உழவன் செயலியில் உள்ள ஜேஃபாா்ம் சா்வீஸ் செயல்தளம் வழியாக டிராக்டா்களையும் உபகரணங்களையும் வாடகைக்கு எடுக்கலாம். தமிழக அரசின் வேளாண்துறை ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button