Components

5 வது ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா மெய்நிகர் வர்த்தக கண்காட்சி  சிறப்பாக நடந்தேறியது

5th acma automechanika held successfully

5 வது ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா மெய்நிகர் வர்த்தக கண்காட்சி  சிறப்பாக நடந்தேறியது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா கண்காட்சி இவ்வாண்டு வழக்கமான ரிப்பன் வெட்டி தொடங்குவதற்கு பதிலாக டிஜிட்டல் மெய்நிகர் கண்காட்சியாக நடந்தேறியது.

இதன்  அமைப்பாளர்களான ஆக்மா மற்றும் மெஸ்ஸி பிராங்க்பர்ட் இந்தியா இந்த இரண்டு நாள் B 2  B நிகழ்வை சென்ற மாதம் 22 – 23ஆம் தேதி நடத்தினர்.  சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்ட ஆக்மா சங்கத்தின் தலைவர் திரு.  தீபக் ஜெயின், மெஸ்ஸி பிராங்பேர்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. ராஜ் மேனக் மற்றும் ஆக்மா சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் திரு. வின்னி மேத்தா தொடக்க விழாவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.2020ஆம் ஆண்டு மிகவும் சவாலாக ஒரு ஆண்டாகும். மேலும் 2021 சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் நிலைமை வியக்கத்தக்க முறையில் மாறிவிட்டது என்று திரு.மேனக் தெரிவித்தார். நிலைத்தன்மை மற்றும் வணிக தொடர்ச்சியை ஊக்குவிப்பதே ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா – வின்  முக்கிய நோக்கமாகும் என்றும் கூறினார்.அந்த உணர்வுடன்தான் திரு.  தீபக் ஜெயின் தனது முக்கிய உரையை தொடங்கினார்.  நிகழ்ச்சி தொடர வேண்டும் என்று தொடங்கிய அவரது உரையில் அவர் மேலும் கூறுகையில் சாதாரண சூழ்நிலையில் இக்கண்காட்சி புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து இருக்கும்.  துரதிர்ஷ்டவசமாக தொற்று நோய் பரவி வருகின்ற காரணத்தினால் டிஜிட்டல் வடிவ நிகழ்ச்சிகள் உலக அளவில் புதிய இயல்பானதாக மாறியதற்கு நன்றியையும் வித்தியாசமான முறையில் வாடிக்கையாளருடன் இணைய முடிகிறது என்பதையும் தெரிவித்தார்.ஆட்டோமொபைல் தொடர் சந்தை  வேகமாகவும் துடிப்பாகவும் வளர்ந்து வரும் ஓர் பிரிவாகும்.  சவாலான நேரமாக இருந்த போதிலும் இந்த குறிப்பிடத்தக்க இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பிறகான தொழில்துறையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அடைந்ததற்கு ஆக்மா தலைவர் பாராட்டினார்.

மேலும் அவர் கூறுகையில் நிதியாண்டில் ஆட்டோமொபைல் தொடர் சந்தையின் வருவாய் 9.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  அதேநேரத்தில் ஒட்டுமொத்த வாகன உதிரி பாக தொழில் வருவாய் 50 பில்லியன் அமெரிக்க டாலராக  உள்ளது.  நிதியாண்டில் வாகனத் தொழிலில் அனைத்து பிரிவுகளும் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஆட்டோமொபைல் தொடர்  சந்தைக்கு பிரிவு   வலுவான வளர்ச்சியை கண்டது. இதைத் தவிர ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி 14.5 பில்லியன் அமெரிக்க டாலராகும்.   இதில் 20 சதவீதம் வருவாய் சந்தைக்குப் பிறகில் இருந்துதான்  என்றார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை, போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கும் அதன்மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களை கவரும்  ஒட்டுமொத்த நோக்கத்துடன் ஆக்மா மற்றும் சியாம் இணைந்து செயல்படுகிறது. இதனை எட்ட  அதிக அளவில் உள்ளூர் மயமாக்கலை ஊக்குவித்து  செயல்படுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உலகெங்கிலும் ஆட்டோ மெக்கானிக்காகளை ஏற்பாடு செய்யும் மெஸ்ஸி பிராங்க்பர்ட் உடன் இணைந்து வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் இது போன்ற வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்பதில் அதிக நன்மைகளை ஆக்மா பெறுகிறது என்று அவர் கூறினார்.

வாகன தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 57 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ள இந்தியாவின் பி.எல்.ஐ. ( உற்பத்தி  இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை ) திட்டத்தை திரு.  ஜெயின் பாராட்டினார்.  இது உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு வாகன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு நன்கு உதவும் ஒரு நடவடிக்கை. உலக அளவில் குறிப்பாக வளர்ந்த பொருளாதாரங்களில் ஓஇஎம்  சந்தை போலவே ஆட்டோமொபைல் தொடர் சந்தையும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

70க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த சப்ளையர்கள் தங்களது சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்த ஆண்டு ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா கண்காட்சியில் காண்பித்ததோடு குழு விவாதங்களையும், வாங்குபவர் –  விற்பனையாளர் சந்திப்பையும் மையமாகக் கொண்டு அனைத்து தொழில் பங்குதாரர்களுக்கும்  மெய்நிகர் சந்தையில் இணைய ஒரு வாய்ப்பு என்று திரு. தீபக் ஜெயின் கூறினார்.

ஃஷாப்ளர் குழுமம் இந்த மெய்நிகர் ஆக்மா ஆட்டோ மெக்கானிக்கா கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button