News

பாஷ் கார் சர்வீஸ் 100 ஆண்டு கால சேவை

Bosch car service celebrates 100 years

 • பாஷ் கார் சர்வீஸ் 100 ஆண்டு கால சேவை1921ஆம் ஆண்டு ஹாம்பர்க்கில்  முதன்முதலில் தனது ஒர்க் ஷாப்பை பாஷ் நிறுவனம் தொடங்கியது.  அதன் பின்னர் உயர்தர கார் சேவைகளுக்கு அறியப்பட்ட ஒரு பிராண்டாக வளர்ந்து வருகிறது பாஷ் கார் சர்வீஸ்.  தற்பொழுது பாஷ் கார் சேவைப் பிரிவு உலகின் மிகப்பெரிய மல்டி பிராண்ட் கார் சேவை ஒர்க் ஷாப் நெட்வொர்க்காக  மாறியுள்ளது.

  பாஷ் மல்டி பிராண்ட் கார் சர்வீஸ் பிரிவு 150 நாடுகளில் 15000 வொர்க் ஷாப்களை கொண்டு இயங்கி வருகிறது.  இந்தியாவில் சுமார் 250 ஒர்க் ஷாப்கள் உள்ளன.  இதில் பாஷ் நிறுவனத்திற்கு சொந்தமான வொர்க் ஷாப்புகளும் அடங்கும். வாகன உரிமையாளர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் விரிவான உலகத்தரம் வாய்ந்த கார் பழுதுபார்ப்பு சேவைகள் மற்றும் தீர்வுகள் இங்கு வழங்கப்படுகிறது.

  மேலும் பாஷ் சேவை மைய்யங்களில், பாஷ் அசல் பாகங்கள்,  பழுது ஆற்றுதலுக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வணிகத்தின், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வொர்க் ஷாப் மேலாண்மை மென்பொருள் போன்றவை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை அளித்து வருகின்றனர்.பாஷின் ஆட்டோமொபைல்  தொடர் சந்தை பிரிவில் மிகமுக்கியமாக திகழ்கிறது பாஷ் கார் சர்வீஸ்.  எளியமுறையில் 1921-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கார் சர்வீஸ் பிரிவு தற்போது 100 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து 150 நாடுகளில் 15000 ஒர்க் ஷாப்கள் கொண்டு இயங்கி வருகிறது. பழுது அறியும் தொழில்நுட்பம், வளர்ந்துவரும் நிபுணத்துவம்,  அசல் உதிரிபாகங்கள்,  சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களால்  அளிக்கப்படும் தொழிற்பயிற்சி போன்றவற்றால் பாஷ் கார் சர்வீஸ் பங்குதாரர்கள் அதிகம் பயன் அடைகின்றனர். தணிக்கைகள், சேவை தர மதிப்பீடுகள் உள்ளிட்ட பாஷின் பல சிறப்பான திட்டங்கள் பாஷ் பங்குதார்களின் உயர் தரத்தை உறுதி செய்கிறது. கார் ஓட்டுனர்கள் அசல் பாஷ் உதிரி பாகங்கள் மற்றும் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் வழங்கப்படும் சிறப்பான சேவைகள் மூலம் பயன் அடைகிறார்கள்.

  2020 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இந்தியாவில் பாஷ் கார் சர்வீஸ் இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டு மிக வலுவான வேகத்தில் வளர்ந்து வருகிறது என்கிறார் பாஷ் ஆட்டோமோடிவ்  ஆஃவ்டர் மார்க்கெட் பிரிவின் தலைவர் திரு.  அஞ்சன் குமார்.

  கோவிட் தொற்றுநோய்  காலத்திலும் உலகலாவிய பிசிஎஸ் நெட்வொர்க் விரிவாக்கத்தில் இந்தியாவில் தான் மிக உயர்ந்த வளர்ச்சி  என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள பல ஓஇஎம் வொர்க் ஷாப், பாஷ் கார் சர்வீஸ் வொர்க் ஷாப்பாக மாறுவதற்கு இது ஓர் முக்கிய தீர்ப்பாக உள்ளது. குறிப்பாக மும்பை, சண்டிகர், சென்னை மற்றும் அகமதாபாதில் உள்ள சர்வீஸ் மையங்கள்.
  தனிப்பட்ட ஒர்க் ஷாப் பாஷ் கார் சர்வீஸ் மையமாக மாறுவதற்கு இதுவே சரியான தருணம் என்கிறார்.  100 ஆண்டுகள் பழமையான பாஷ் கார் சர்வீஸ்  உடன் இணைந்து செயல் புரிவதில் பங்குதாரர்களுக்கு பலதரப்பட்ட நன்மைகள் கிட்டும்.  குறிப்பாக வாகனங்களின் டயக்னாஸ்டிக்ஸ்,   உதிரிபாகங்கள்,  தொழில்நுட்ப சேவை போன்றவற்றை பெற்று பயனடையலாம்.  முக்கிய ஓஈஎம் – களுக்கு இணையான சர்வீஸ்களை  வாடிக்கையாளர்களுக்கு வழங்கி நன்மதிப்பை பெறலாம். முக்கியமாக 100 ஆண்டுகால மைல்கல்லை எட்டும் அதே வேளையில், எதிர்கால டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி உள்ளோம்  என்பதில் பெருமை கொள்கிறோம்.

  பாஷ் கார் சேவைப் பிரிவு தற்போது இந்தியா முழுவதும் 250க்கும் மேற்பட்ட டச்பாயிண்டுகள் கொண்டுள்ளது.   நிறுவனத்திற்கு  சொந்தமாக இயங்கும் பாஷ் கார் சேவை அதிநவீன வசதிகளுடன் 2017ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்டது.  இந்த ஒர்க் ஷாப் திறன் மையமாகவும், கலங்கரை விளக்கமாகவும் செயல்படுகிறது. இங்கு அனைத்து புதிய முயற்சிகளும் மதிப்பு முன்மொழிவுகளை சோதித்துப் பார்த்து பின்பு இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது.

  3 M, ஐ டி டபுள்யூ, மஹேந்திரா இன்சுரன்ஸ், அஷ்யூரண்ட்  இந்தியா, கேட்ஸ் யுனிட்டா  போன்ற முன்னணி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் பாஷ் கார் சர்வீஸ் பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மதிப்பு மேம்பாட்டை வழங்குகின்றனர்.

  தனிப்பட்ட ஒர்க் ஷாப் பிரிவில் சிறப்பான சேவைகளை வழங்குவதன் காரணமாக பாஷ் கார் சர்வீஸ் பிரிவு முன்னணியில் உள்ளது.

  அதன் நெட்வொர்க் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்தி, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தரவின் ஸ்மார்ட் பயன்பாட்டின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒர்க்ஷாப் உரிமையாளர்களுடன் ஒருங்கிணைந்த  வலுப்படுத்துதல் மூலம் இந்தியாவில் மேலும் சிறப்பான வளர்ச்சியை எட்ட முடியும் என்கின்றனர். விரிவான வாகன பழுது  தீர்வுகள், சேவை மற்றும் ஏராளமான மதிப்பு முன்மொழிவுகளை வழங்குவதன் மூலம் பாஷ் கார் சர்வீஸ் என்பது உங்கள் வீட்டு ஒர்க்ஷாப் தான் … ‘ உங்கள் காருக்கு தேவையான அனைத்திற்கும்’.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button