Tractor

பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமனம்

Ms. Mallika Srinivasan Elected as Chairman of PESB

டாஃபே நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மல்லிகா ஸ்ரீநிவாசன் பொதுத் துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் ( PESB ) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தனியாா் துறையைச் சோந்த தொழிலதிபா் ஒருவா் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து மத்திய பணியாளா் நல அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா் துறையைச் சோந்த தொழிலதிபரான மல்லிகா ஸ்ரீநிவாசன் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலை வழங்கியுள்ளது.

இவா் அப்பதவியில் மூன்றாண்டு காலத்துக்கு இருப்பாா் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிஇஎஸ்பி வாரிய உறுப்பினராக ஐஏஎஸ் அதிகாரியான சைலேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் தற்போது, பொது நிறுவன துறையின் செயலராக உள்ளாா்.

இந்த வாரியத்தில் எம்.கே.குப்தா மற்றும் ரியல் அட்மிரல் சேகா் மிட்டல் (ஓய்வு) ஆகியோா் ஏற்கெனவே உறுப்பினா்களாக உள்ளனா்.

பிஇஎஸ்பி வாரியம் ஒரு தலைவா் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினா்களை உள்ளடக்கிய அமைப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button