Truck & Bus

டாடா மோட்டார்ஸ் புதிய தலைமுறை, ஸ்மார்ட் லாரிகள் தொகுப்பான Ultra Sleek T-Series வரம்பை அறிமுகம் செய்துள்ளது

Tata Motors Unveils Ultra T- Series

பலதரப்பட்ட நகர்புறப் பயன்பாடுகளுக்காக Ultra T.6, T.7 மற்றும் T.9 ஆகியமூன்றுமாடல்களில்கிடைக்கிறது

Girish Wagh

முக்கியசிறப்பம்சங்கள்:

 சுலபமானகையாளுதல் மற்றும்குறைந்தசெயற்பாட்டு நேரங்களுக்கு ஏற்புUltra Sleek 1900mmஅகலமானகேபினைக் கொண்டுள்ளது

  • உயர் தர   நம்பகத்தன்மை மற்றும் நீடித்த செயல்பாட்டிற்காக, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட, கிராஷ்சோதனைகள் செய்யப்பட்ட கேபின்களைக் கொண்டுள்ளன.
  • பல்வேறு டெக் நீளங்களிலும் மற்றும் 4/6-டயர் சேர்க்கைகளோடும், பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒரு மாட்யூலர் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது
  • தொழிற்துறையின்சிறந்த பேலோட் திறனை வழங்குகிறது மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் வகையினத்தின் சிறந்த இயக்கச் செலவீனங்களுடன், அதிசிறந்த எரிபொருள் செயல்திறனையும் வழங்குகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வணிகவாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், அதன் புதிய அளவிலான இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக லாரிகள் (I & LCV) அடங்கிய Ultra Sleek T-Series வரம்பை அறிமுகம் செய்துள்ளது. இவை, நகர்ப்புற போக்குவரத்தின் நடப்புத் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. T.6, T.7 மற்றும் T.9 ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும் புத்தம் புதிய Ultra Sleek T-Series வரம்பு, தேவையான அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்ப 10 முதல் 20 அடிவரையிலான மாறுபட்ட டெக் நீளங்களில் கிடைக்கிறது. ஒரு நேர்த்தியான 1900 மிமீ அகலமான கேபின் சிறந்த ஓட்டுனர் வசதியை அளிக்கும் அதே நேரத்தில், குறுகலான நகர இடைவெளிகளில் விரைவான இயக்கத்தை வழங்குகிறது, மேலும்அதன் ஸ்மார்ட் அம்சங்கள் எளிதான கைளாளுதல்களுக்கு உதவுகின்றன. எதிர்காலத்திற்கும் ஏற்ற, இந்த புதியதலை முறைவாகனங்கள் டாடாமோட்டார்ஸ், ‘பவர்ஆஃப் 6’ தத்துவத்தின் அடிப்படையில், சிறந்த வாகனசெயல்திறன், ஓட்டுநர்வசதி, சொகுசு மற்றும் இணைப்புத் திறன்களுடன், பாதுகாப்பையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளன – இவை அனைத்தும் குறைந்த மொத்த உரிமைச் செலவீனங்களுடன் (TCO) கிடைக்கப்பெறுகிறது.

Ultra Sleek T-Series வரம்பை அறிமுகம் செய்த, டாடாமோட்டார்ஸ் வணிக வாகனங்கள் வர்த்தக பிரிவின் தலைவர் திரு. கிரிஷ்வாக்அவர்கள், “வணிக வாகனங்கள் களத்தில் தலைமைத்துவ நிலையில் வீற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ் சிறந்த, எதிர் காலத்திற்குத் தயாரான தயாரிப்புகளை மற்றும் அதன்பல் வேறு பிரிவுகளுக்கான தீர்வுகளைஅறிமுகப்படுத்துவதன் மூலம் தொடர்ந்து புதிய வரையறைகளைஅ மைத்து வருகிறது. Ultra Sleek T-Series வரம்பின் வெளியீடு நகர்ப்புற சரக்கு போக்குவரத்திற்கு ஒரு புதியஅடையாளத்தை குறிக்கிறது. இந்த லாரிகள் கச்சிதமானதாகவும், அறிவார்ந்ததாகவும் விரைவான இயக்கத்தை செயல்படுத்துவதாகவும்  திகழ்வதால், அதிக பயணங்கள் மற்றும் அதிக பயணங்களுடன் கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகியவற்றைச் சாத்தியமாக்குகின்றன. சர்வதேசஅளவில்அங்கீகரிக்கப்பட்டUltra அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த லாரிகள் பல விதமானபயன்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு ஏற்பவடிவமைக்கப்பட்டுள்ளனஎன்று கூறினார்.

Ultra Sleek T-Series வரம்பு எதிர்காலத்திய ஸ்டைலை சொகுசுடன் ஒருங்கிணைக்கும் வகையில், குறிப்பிடத்தக்க அளவுகு றைந்த சத்தம், அதிர்வு மற்றும் கடுமை தன்மை (NVH) நிலைகளைக் கொண்டுள்ளது, நெரிசலான மற்றும் குறுகிய சாலைகளில் இயக்கத்தை எளிதாக்குகிறது மற்றும் சோர்வு இல்லாத ஓட்டுநர் அனுபவத்தைவழங்குகிறது. இதன் வாக்-த்ரூ அறை சிறந்த பாதுகாப்பிற்காக கடுமையான கிராஷ்-சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் சரிசெய்யக்கூடிய இருக்கை உயரம், சாய்வு தன்மைகள் மற்றும் டெலெஸ்கோபிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட கியர் லீவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட இசைஅமைப்பு, USB ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் மற்றும் தாராளமாக சேமிப்பு அமைவிடங்கள் ஆகியவை மேம்பட்ட வசதியை அளிக்கின்றன, அதே நேரத்தில் ஏர்பிரேக்குகள் மற்றும் பேரபோலிக் லீஃப் சஸ்பென்ஷன்கள் சிறந்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகின்றன, கிளியர்-லென்ஸ் ஹெட்லேம்ப்கள்மற்றும் LED டெயில்-விளக்குகள் மூலம் இரவு நேரக் காட்சித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளன.

தனது பன்முகத்தன்மையை உறுதிப்படுத்திடும் வகையில், Ultra Sleek T-Series 4-டயர்மற்றும் 6-டயர் சேர்க்கைகள் மற்றும் மாறுபட்ட டெக்நீளங்களைக் கொண்டுள்ள வகையினங்களை உள்ளடக்கியுள்ளது, இந்த வரம்பு பல் வேறு போக்குவரத்து தேவைகளுக்குஏற்பவடிவமைக்கப்பட்டுள்ளது. மின்-வர்த்தகத் தயாரிப்புகள், FMCG, தொழில்துறைபொருட்கள், LPG சிலிண்டர்கள்மற்றும்கோவிட் -19 தடுப்பூசி, மருந்துகள் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களுடன், பால் மற்றும் புதிய பண்ணை விளை பொருள்கள் போக்குவரத்துக்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் போன்ற பல் வேறு வகையான பயன்பாடுகளைப் பூர்த்தி செய்திடும் கையில் இந்த வரம்பு உருவாக்கப்பட்டுள்ளது..

100hp ஆற்றல் மற்றும் 300Nm முறுக்கு மதிப்பீட்டைக் கொண்டஎதிர்காலத்திற்கும்-தயாரானBS6 4SPCR எஞ்சினை இந்த வரம்பு கொண்டுள்ளது. இது, உகந்தசக்திமற்றும்வகையினத்தின்-சிறந்த எரிபொருள் செயல் திறனை வழங்குகிறது. சிறந்த ஆயுளை வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டஒரு வலுவான மாட்யூலர் சேஸ் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை மேலும் உயர்த்தும் வகையில், குறைந்த-ரோலிங் ரெசிஸ்டென்ஸ் கொண்ட ரேடியல் டயர்கள் மூலம் இந்த வரம்புமேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை இணைக்கப்பட்ட வாகனதீர்வான ஃப்ளீட்எட்ஜ்மூலம், டாடா மோட்டார்ஸ் தகவலறிந்த முடிவெடுப்பதன் மூலம் வாகனங்கள் தொகுப்பின் நிர்வாகத்தை மேம்படுத்த டெலிமாடிக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது. இந்த தீர்வுவாகனத் தொகுப்புகளின் உரிமையாளர்களுக்கு வாகனங்களைக் கண்டறிதல் மற்றும் ஓட்டுனர் நடத்தை பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகிறது, இது சிறந்த வாகனங்கள் தொகுப்புப் பயன்பாட்டிற்குஉதவுகிறது. ஃப்ளீட்எட்ஜ் தீர்வு மாறுபட்ட வாகனங்கள் தொகுப்புகளின்அளவுகளுக்கு ஏற்ப, பொருத்தமானதாகவும் மற்றும் பயனளிக்கக்கூடியதாகவும் திகழ்கிறது.

சிறந்த நிதி திட்டங்கள், நாடு தழுவிய சேவை உத்தரவாதம் மற்றும் அதிக மறு விற்பனை மதிப்பு போன்ற பல நன்மைகளுடன், முழுமையாக கட்டமைக்கப்பட்ட தீர்வுகளின் விரிவான தொகுப்பையும் இது வழங்குகிறது, இதனால் வாழ்க்கைச் சுழற்சியின் மூலம், அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பு முன்மொழிவை உருவாக்குகிறது.

இந்த இலாபகரமான சலுகைகளைச் சேர்த்து, டாடாமோட்டார்ஸ் I&LCV வரம்பில் 3 ஆண்டுகள் / 3 லட்சம் கிலோமீட்டர் என்னும் ஒப்பீடற்ற உத்தரவாதமும் கிடைக்கிறது. டாடா மோட்டார்ஸ் சம்பூர்ணசேவா 2.0 மற்றும் டாடா சமர்த் ஆகியவற்றை வழங்குகிறது – வணிகவாகனஓட்டுநர்நலன், நேரஉத்தரவாதம், ஆன்-சைட் சேவை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வருடாந்திர பராமரிப்பு மற்றும் வாகனங்கள் தொகுப்பின் மேலாண்மை தீர்வுகளுக்கான ஒவ்வொரு I & LCV டிரக்கிற்குமான நிறுவனத்தின்பிரத்தியேகச் சலுகையாக இவை திகழ்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button