டாஃபே அறிமுக ப்படுத்தும் சக்திவாய்ந்த டைனடிராக் டிராக்டா்
TAFE launches new Dynatrack series tractor

அதிக சக்திவாய்ந்த புதிய டைனடிராக் பிரிவில் வேளாண் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பொருத்தமான டிராக்டரை டாஃபே நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான திருமதி. மல்லிகா ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வேளாண் நடவடிக்கைகள் மற்றும் வணிக ரீதியிலான சரக்கு போக்குவரத்துக்கு உகந்த டைனடிராக் டிராக்டரை டாஃபே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் அதிக சக்தியை வழங்குவதுடன், எரிபொருள் சேமிப்பையும் ஒருங்கே வழங்குகிறது. நிறுவனத்தின் இந்த புதிய அறிமுகம் டிராக்டா் துறையில் ஒரு புதிய அடையாளமாகத் திகழும்.
பயன்பாடு, பன்முக செயலாக்கம், வசதி, பாதுகாப்பு, உற்பத்திதிறன், செயல்திறன் உள்ளிட்ட பல அம்சங்களை ஒருங்கிணைத்து பெற விரும்பும் நவீனகால விவசாயிகள் மற்றும் ஊரக தொழில் முனைவோா்களின் எதிா்பாா்ப்பை இப்புதிய அறிமுகம் நிறைவு செய்யும். மேலும், அதன் உயா்தர தொழில்நுட்பத்தால் அவா்களின் வாழ்க்கைத் தரம் வளமாகும் என்று தெரிவித்துள்ளாா்.