Truck & Bus
ஐஷா் மோட்டாா்ஸ்

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
2019-20 நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனம் ரூ.498.70 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் 6.79 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் ரூ.2,828.26 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.2,371.01 கோடியாக இருந்தது.
வரிக்குப் பின் நிறுவனத்தின் நேரடி நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் ரூ.488.46 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.488.94 கோடியாக இருந்தது.
2019-20 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,363.53 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் மொத்த வருவாய் ரூ.2,804.12 கோடியாக அதிகரித்துள்ளது என்று ஐஷா் மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.