Lubricants

பிரேக்ஸ் இந்தியா வெளியிடும் ஈஸ்டீர் ஸ்டிரிங் ஃப்ளூயிட் 

டிவிஎஸ் குழும நிறுவனமான பிரேக்ஸ் இந்தியா  ஆட்டோமொபைல் மற்றும் இதர தொழில் துறை பயன்பாட்டிற்காக பிரேக்கிங் கருவிகள்  தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.  இந்நிறுவனம் உலகெங்கிலும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் அசல் உதிரிபாக சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை கொண்டு செயலாற்றி வருகிறது.
 பிரேக்ஸ் இந்தியா தனது தயாரிப்புகளை வாகன உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், வாகன தொடர் சந்தையிலும் மிகப்பெரிய  ஆதிக்கத்தை கொண்டுள்ளனர்.
 சமீபத்தில் பிரேக்ஸ் இந்தியா, கார்,  மல்டி யூட்டிலிட்டி வெஹிகிள்ஸ், மற்றும் கனரக வாகனங்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட பவர் ஸ்டீரிங் ஃப்ளூயிட் – யை ஈஸ்டீர்  என்ற வணிகப் பெயரில் அறிமுகம் செய்துள்ளனர்.  இந்த புதிய தயாரிப்பு மேம்பட்ட உராய்வு பண்புகள் கொண்டு 1,60,000 கிலோ மீட்டர் வரை நீண்ட வடிகால் இடைவெளிகளை வழங்குகிறது. இத்தயாரிப்புகள் ஜிஎம் டிஏஎஸ்ஏ ( GM TASA  ) தரத்தினைபூர்த்தி செய்கிறது.
 சிந்தடிக் இல்லாத இந்த ஃப்ளூயிட் நீண்ட நாள் உழைக்கவல்லது. ஈஸ்டீர், நுரை உருவாக்குவதை தவிர்த்து  சிறந்த சீலிங்கை வழங்குகிறது.
இந்த வெளியீடு குறித்து பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன தொடர் சந்தை பிரிவின் துணைத் தலைவர் திரு. சுஜித் நாயக் தெரிவிக்கையில் “பிரேக் ஃப்ளூயிட் மற்றும் கூலண்ட் தயாரிப்பதில் பிரிக்ஸ் இந்தியா ஓர் முன்னணி நிறுவனமாகும்.   போட்டி மிகுந்த இந்த சந்தையில் நுகர்வோருக்கு ஒட்டுமொத்த வாகன செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும்  அவசியத்தை கருத்தில் கொண்டு எங்களின் தயாரிப்பு வரம்பை விரிவாக்குவது முக்கியம் என்றார். பவர் ஸ்டீரிங் திரவத்திற்கான இந்த வெளியீடு எங்களின் போர்ட்ஃபோலியோ – வை பலப்படுத்தும். மேலும் நுகர்வோரின் தேவை மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து அளிப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது ” என்றார்.
டிஓடி3, டிஓடி 4, டிஓடி 4+ , வெரிகூல், ஆக்குவாகூல், ஈஸ்கூல் மற்றும் ஈஸ்கீளின் ( பிரேக் கீளினர் ) போன்ற எங்களின் தயாரிப்புகள் டிவிஎஸ் கிரில்லிங் என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகி வருகிறது.  எங்களின் இந்த சமீபத்திய ஈஸ்டீர் அறிமுகத்தைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் எங்களின் அனைத்து ஃப்ளூயிட்  தயாரிப்புகளும் டிவிஎஸ் ஸ்ப்ரிண்டர் என்ற புதிய வர்த்தக பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் என்றார்.  திரவ ஓட்டம் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றை குறிக்கும் ஸ்பிரின்டர் என்ற என்ற பெயர்,  வாகனத்தின் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதனை  சுட்டிக்காட்டுகிறது. இந்த பிராண்ட் மாற்றம் எங்களின் தயாரிப்புகளுக்கு ஓர் தனித்துவமான அடையாளத்தையும் நிலைப்பாட்டையும் அளித்து சந்தையில் மேலும் ஊடுருவ வழிவகை செய்யும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button