Two & Three Wheeler

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பிஎஸ்-6 விற்பனைக்கு வந்தது

ரூ.1.15 லட்சத்தில் விற்பனைக்கு வெளியடப்பட்டுள்ள பிஎஸ்6 இன்ஜின் பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீ ம் 200 எஸ் ஃபேரிங் ரக பைக்கின் சிறப்புகள். எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே ஆயில் கூலர் பெற்ற 200சிசி என்ஜின் அதிகபட்சமாக 18.08 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 16.4 Nm முறுக்குவிசை திறனை கொண்டதாக விளங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது.

ப்ளூடூத் ஆதரவை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூலம் டரன் பை டர்ன் நேவிகேஷன் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், டிரிப்மீட்டர், ஓடோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர், சர்வீஸ் இன்டரவெல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 7 வழி முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. 17 அங்குல வீல் கொண்டு 276 மிமீ டிஸ்க் முன்புறத்தில், 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீ ம் 200 எஸ் பைக்கின் விலை ரூ.1,15,715 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) அமைந்திருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button