
ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 LNG ஸ்டேஷன்
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பின் எதிரொலியாகப் பெட்ரோல், டீசலை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று எரிபொருள் பயன்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்தியாவில் அடுத்த 3 வருடத்தில் 10000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்கும் இலக்குடன் இந்தியா முழுவதும் சுமார் 1000 எல்என்ஜி அதாவது liquefied natural gas ஸ்டேஷன்களை அமைக்கும் மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு liquefied natural gas-ஐ முக்கிய எரிபொருளாக மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் படியாக இந்திய சந்தையில் முன்னணி எரிவாயு நிறுவனங்கள் இணைந்து சுமார் 50 எல்என்ஜி ஸ்டேஷன்களை அமைத்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் இதன் படி இந்தியன் ஆயில் கார்ப் 20 எல்என்ஜி ஸ்டேஷன்களையும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் மற்றும் பார்த் பெட்ரோலியம் கார்ப் தலா 11 எல்என்ஜி ஸ்டேஷன்களையும், கெயில் இந்தியா 6 எல்என்ஜி ஸ்டேஷன்களையும், பெட்ரோநெட் 2 எல்என்ஜி ஸ்டேஷன்களை அமைத்துள்ளது.
இதில் குஜராத்தில் 10 ஸ்டேஷன்களும், ஆந்திராவில் 6, கர்நாடகாவில் 5, கேரளாவில் 3, தமிழ்நாட்டில் 8, ராஜஸ்தானில் 3 என முதல் 50 எல் என்ஜி ஸ்டேஷன்களை நாட்டின் தங்க நாற்கர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தர்மேந்திர பிரதான் அடுத்த 3 வருடத்தில் 1000 எல்என்ஜி ஸ்டேஷன்களை இந்தியா முழுவதும் அமைக்க 10000 கோடி ரூபாய் அளவிலா முதலீட்டை எதிர்பார்த்து இத்திட்டத்தை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். எல்என்ஜி ஸ்டேஷன் மேலும் அடுத்த ஒரு வருடத்தில் இந்தியாவில் புதிதாக 150 எல் என்ஜி ஸ்டேஷன்களை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் 200 கிலோமீட்டருக்கு ஒரு எல்என்ஜி ஸ்டேஷனை அமைப்பதை இலக்காக வைத்துள்ளது மத்திய அரசு. கனரக வாகனங்கள் இந்தியாவில் கனரக வாகனங்கள் அனைத்தும் எல்என்ஜியில் இயங்கும் திறன் கொண்ட வாகனங்களாக மாற்றும் முயற்சியில் தற்போது பல நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
இதனால் இந்தியாவில் எல்என்ஜி பயன்பாடு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் லாரி உரிமையாளர்களின் அதிகளவிலான செலவுகள் குறையும்.
டீசல் மற்றும் எல்என்ஜிஐ ஒப்பிடுகையில், எல்என்ஜி விலை 40 சதவீதம் குறைவு. இது போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிகளவிலான லாபத்தைக் கொடுப்பது மட்டும் அல்லாமல் அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் ஏற்படும் பணவீக்கம் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை எல் என்ஜி பயன்படுத்துவதால் கட்டுப்படுத்த முடியும்.