
பிஎம்டபிள்யூ-ன் புதிய ‘எக்ஸ்5 எம் காம்படிஷன்’ சொகுசுக் கார் அறிமுகம்
ஜெர்மனியைச் சோந்த நிறுவனமான பிஎம்டபிள் யூ முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எக்ஸ்5 எம் காம்படேஷன் என்ற புதிய வகை சொகுசுக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ குழும இந்தியா தலைவர் விக்ரம் பவா கூறியதாவது: –
வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எக்ஸ்5 எம் காம்படேஷன் காரை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு பயணத்தை விரும்பும் கார் பிரியர்களுக்கு இது முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.
இந்த மாடல் காரில் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 600 ஹெச்பி திறனை வெளிப்படுத்தக்கூடியது.
தானியங்கி முறையிலான 8கியரை உள்ளடக்கிய இந்த காரில் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 விநாடிகளில் தொட்டுவிட முடியும். அதிகபட்ச வேகமாக மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் இந்த காரில் பயணிக்க முடியும். இப்புதிய காரின் விலை ரூ.1.95 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.



