
கோயம்புத்தூரில் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மையம்
எம்.ஜி மோட்டார் முதல் 60 கிலோவாட் சூப்பர்ஃபாஸ்ட் பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை கோயம்புத்தூரில் உள்ள தனது டீலர்ஷிப்பில் நிறுவியுள்ளது. நாடு முழுவதும் DC சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொன்டுவருவதற்கான எம்.ஜி மற்றும் டாடா பவர் நிறுவனங்களின் கூட்டணி முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சார்ஜிங் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பொது சார்ஜர் வாடிக்கையாளர்களுக்கு 24×7 கிடைக்கும் மற்றும் CCS / CHAdeMO வேகமாக சார்ஜ் செய்யும் தரங்களுடன் வருகிறது. அதன் எம்ஜி ZS EV வாடிக்கையாளர்களுக்கு 5-வழி சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது.
டாடா பவர் EZ சார்ஜ் பிராண்டின் கீழ் 26 வெவ்வேறு நகரங்களில் 270+ சார்ஜிங் நிலையங்களுடன் விரிவான EV சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை நிறுவியுள்ளது. எளிதான மற்றும் மென்மையான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க நிறுவனம் ஒரு வலுவான டிஜிட்டல் தளத்தையும் வழங்குகிறது.
MG ZS EV வாடிக்கையாளர்கள் தங்கள் எஸ்யூவியை 50 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை நகரத்தில் நிறுவப்பட்ட DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். ZS EV வாடிக்கையாளர்களுக்காக நிறுவனம் வழங்கிய பிற சார்ஜிங் விருப்பங்களில் இலவச AC ஃபாஸ்ட் சார்ஜர் (வாடிக்கையாளரின் வீடு / அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது), நீட்டிக்கப்பட்ட சார்ஜிங் நெட்வொர்க், பிளக் & சார்ஜ் கேபிள் மற்றும் RSA (சாலையோர உதவி) உடன் charge on the go வசதி ஆகியவை அடங்கும்.



